சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017

Published:Updated:
சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம்! #SaniPeyarchi2017
0Comments
Share

இந்த வருடம் (2017)  டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனீஸ்வர பகவான். அவர் 26.12.20 வரை தனுசு ராசியில் இருந்து பலன்களைத் தர உள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து, 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். ஒவ்வொரு ராசியினருக்கும் அவர் கூறிய பலன்களில் இன்று சிம்ம ராசி அன்பர்களுக்கான பலன்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

சிம்ம ராசி அன்பர்களே! சூரியனுக்கு உரிய சிம்மராசியில பிறந்திருக்கீங்க. பொதுவாகவே சூரியனுக்கும் சனிக்கும்  சின்னதா ஒரு பகை எப்போதும் இருந்துக்கிட்டுத்தான் இருக்கும். கடந்த இரண்டரை வருடமாக நான்காவது இடத்தில் இருந்து நாலா வழிகளிலும் அலைச்சலைத் தந்தவர் சனிபகவான். 

எதைத் தொட்டாலும் நஷ்டங்கள். எங்கே போனாலும் பிரச்னைகள். மனதில் எந்தவிதத்திலும் நிம்மதி இல்லாத நிலை. எதிலும் ஏமாற்றங்கள், எதிர்மறை எண்ணங்கள் தாழ்வு மனப்பான்மை போன்றவை எல்லாம் மனதில் தோன்றி உங்களை அலைக்கழித்திருக்கும். என தொடர்ந்து கஷ்டங்கள். இப்போது அவர் 5 -ம் இடத்துக்குச் செல்கிறார். 

தாயாருடைய மருத்துவச்செலவுகளால் இவ்வளவு நாளகளாக அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். இனி, அவரது உடல் நலம் சீரடையும். தாயாருடைய ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். வீடுகட்ட முடிவு செய்து பாதியிலேயே நின்றுபோன கட்டடவேலைகள் இனி வேகவேகமாக நடந்து முடியும். நீண்ட நாள்களாக சொந்த வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அடிக்கடி செலவு வைத்துக் கொண்டிருந்த வீட்டுப் பராமரிப்பு, வண்டி வாகன பராமரிப்புச் செலவுகள்  குறையும்.
இப்போது 5 - இடத்துக்கு சனிபகவான் வந்து உட்காருகிறார். பூர்வ புண்ணியஸ்தானமாக இந்த இடம் இருக்கிறதால் பூர்வீக சொத்துக்களில் சின்னச்சின்ன பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

5 - ம் இடம் குழந்தைகளுக்கு உரிய இடமாக  இருப்பதால்,  பிள்ளைகள்  விஷயத்தில் கவனமாக இருங்கள். அவர்கள் போக்கிலேயே அவர்களைவிட்டு  திருத்த பர்ருங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாக பங்குதாரர்கள் யாரையும் சேர்க்காதீர்கள். பொதுவில் இந்த சனிப்பெயர்ச்சி இத்தனை நாள்களாக இருந்து வந்த தொல்லைகள் மறையும். எச்சரிக்கையுடன் செயல் பட்டு வெற்றி அடைய வேண்டிய நேரம் இது. 

சிம்ம ராசிக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மரை  வணங்கினால் மேலும் நல்ல பலன்களைப் பெறலாம்   


(சிம்ம ராசிக்காரர்கள் இந்த வீடியோ லிங்க்கில்... சனிப்பெயர்ச்சியின் விரிவான பலன்களை அறியலாம்.) 

சிம்ம ராசி அன்பர்கள் சனிப்பெயர்ச்சியையொட்டி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலூகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம்.  

லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில், தனித்துவம் பெற்று இந்தக் கோயில் விளங்குகின்றது. இந்தக் கோயில் கருவறையில் இருக்கும் ஆஞ்சநேயரை வியாசரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

இது தவிர இன்னொரு ஆஞ்சநேயரும் இந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையான கோயில் இது.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் கெடிலம் கூட்டு ரோட்டிலிருந்து இந்தக்கோயிலுக்குச் செல்ல பஸ் வசதி உள்ளது. குறைவான பஸ் வசதியே உள்ளதால், ஆட்டோ அல்லது டாக்ஸியில் சென்று வரலாம். காலை 6 மணிமுதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் நரசிம்ம ஜயந்தி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரதி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

எல்லா கோயில்களிலும் நரசிம்மரே லட்சுமிதேவியை ஆலிங்கனம் செய்தபடி இருப்பார். இத்திருத்தலத்தில்  நரசிம்மரை  தாயார் ஆலிங்கனம் செய்தபடி  இருப்பார். இது எங்கும் காணக்கிடைக்காத காட்சி. திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து நரசிம்மரை வழிபட்டால் நலம் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுகிறவர்கள், சுவாமிக்கு எண்ணெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, மஞ்சள் ஆகிய பொருட்களை வாங்கிக்கொடுத்து அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படாமல் இருக்க சிம்ம ராசி அன்பர்கள் தவறாமல் இந்தத் திருத்தலத்துக்குச் சென்று இறைவனை தரிசித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.