சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!

சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!

Published:Updated:
சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!
சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!
0Comments
Share

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலக்கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் அல்வா பாக்கெட்களோடு வந்து அல்வா கொடுத்து போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது “தமிழகத்தில் குற்றப் பழங்குடி சட்டத்தால் பாதிக்கப்பட்ட 68 சாதிகளான பிரன்மலைக் கள்ளர், கூத்தப்பர் கள்ளர்,  போயர்,  தொட்டி நாயக்கர்,  தாசரி,  குறவர்,  ஒட்டர், மறவர், அகமுடையர், வலையர், செட்டிநாடு வலையர், பெரியசூரி, செம்மநாட்டு மறவர், கவுண்டர், படையாச்சி, அம்பலக்காரர், செட்டி ஆகியோர் பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். 1979-ம் ஆண்டுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் எங்களைப் பழிவாங்கிவிட்டார்.

சீர்மரபினர் பழங்குடியினர் என்று அறிவித்து பட்டியலில் சேர்த்துவிட்டார். இதனால் எங்களுக்கான சலுகைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எங்களுக்கான இலவச உயர்கல்வி பாதிக்கப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதும் குற்றப்பழங்குடியினர் என்றுதான் அழைத்துவருகிறார்கள். 2008-ம் ஆண்டு மத்திய அரசின் ஆணையம் குற்றப் பழங்குடியினர் என்றுதான் அழைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அதேபோன்று 2014-15-ம் ஆண்டு முதல் மத்திய அரசு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்திவருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்திட்டம் கிடைக்கவில்லை. எனவே, எங்களுக்கான நலவாரியத்துக்கு உடனே உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். உறுப்பினர் அட்டைகளை காலதாமதம் இல்லாமல் வழங்கவேண்டும். இவை அனைத்தையும் கணிணிமயமாக்கப்படவேண்டும்” என்று கோரிக்கைவிடுத்தனர்.