SPY Photos: ராயல் என்ஃபீல்டின் புதுசா இரண்டு புல்லட்ஸ்… டூரர், அட்வென்சர் பைக்குகளின் ஸ்பெஷல் என்ன?

ராயல் என்ஃபீல்டு அடுத்து வெளியிட இருக்கும் இரண்டு புதிய பைக்குகளின் ரகசியப்படங்களை படம்பிடித்துள்ளார் மோட்டார் விகடன் வாசகர் அர்ஜுன்.

Published:Updated:
SPY Photos: ராயல் என்ஃபீல்டில் இருந்து 2 பைக்குகள்!
SPY Photos: ராயல் என்ஃபீல்டில் இருந்து 2 பைக்குகள்! ( Photos: Arjun )
0Comments
Share

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திலிருந்து அடுத்த 350 சிசி டூரர் ஒன்றும், புது ஹிமாலயன் பைக் ஒன்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இல்லை.. மத்தியிலேயே வர இருக்கின்றன. அந்த ஸ்பை படங்களை திண்டிவனம்–மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் விரட்டி விரட்டிப் படம் பிடித்திருக்கிறார், நமது மோட்டார் விகடன் வாசகர் அர்ஜூன்.

350 சிசி டூரர்
350 சிசி டூரர்
புதிய ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கை டிசைன்
புதிய ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கை டிசைன்

ஹைனெஸ், CB350, பெனெல்லி இம்பீரியல், ஜாவா 42 போன்ற பைக்குகளுக்குப் போட்டியாக, கொஞ்சம் க்ளாஸிக் ஆகவும், ரெட்ரோ ஸ்டைலிலும் இந்தப் புதிய ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கை டிசைன் செய்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. கொஞ்சம் ஓவராக இருந்தாலும், திடீரெனப் பார்ப்பதற்கு டுகாட்டியின் ஸ்க்ராம்ப்ளர் போலவே இருக்கிறது.

டேங்க், பல்க்கியாக இல்லாமல் தட்டையாக இருக்கிறது. ஸ்ப்ளிட் சீட் இல்லை; இதன் சிங்கிள் சீட் அப்படியே தட்டையாக, நீளமாக இருக்கிறது. பின் பக்கப் பயணி கீழே விழுந்து விடாமல் சாய்ந்து கொள்வதற்கு, பேக்ரெஸ்ட் கொடுத்திருந்தார்கள்.

இதுவே ஹிமாலயனில் பில்லியன் சீட் கொஞ்சம் உயர்த்தி வைக்கப்பட்டிருப்பதோடு, கேரியர் இருக்கிறது. அட்வென்ச்சர் பேக்குகளை இதில் கட்டிக் கொள்ளலாம். ஸ்போர்ட்ஸ் டூரரில் இரண்டு பக்கமும் பட்டன் டயர்கள் ஒரே அளவில் இருக்க, புது ஹிமாலயனில் பின் பக்க டயர் மட்டும் கொஞ்சம் தடிமனாக இருந்தது. டூரரில் கறுகறுவென அலாய் வீல்கள் இருந்த நிலையில், நிச்சயம் இதில் ட்யூப்லெஸ் டயர்கள் என்பது உறுதியாகிறது. இதுவே ஹிமாலயனில் ஸ்போக் வீல்கள்தான் இருந்தன. எனவே, இது ட்யூப் டயர்களாகத்தான் இருக்கும். புது ஹிமாலயனில் அதே வட்ட வடிவ ஹெட்லைட்தான் என்றாலும், அதைச் சுற்றியுள்ள க்ளாம்ப்பில் மாற்றம் இருக்கிறது.

பில்லியன் சீட்
பில்லியன் சீட்
பேக்ரெஸ்ட்
பேக்ரெஸ்ட்

புது ஹிமாலயனில் இருக்கப் போவது, அதே 411 சிசி இன்ஜினாகத்தான் இருக்குமா என்று தெரியாத நிலையில், ஸ்போர்ட்ஸ் டூரரில் இருந்தது மீட்டியாரின் அதே 349சிசி, ஏர்–ஆயில் கூல்டு – 20.2bhp மற்றும் 2.7kgm இன்ஜின் சமாச்சாரங்கள்தான். கியர்பாக்ஸும் அதே 5 ஸ்பீடுதான். இதன் டேங்க்கும் அதே 15 லிட்டராகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

வழக்கமான ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கில் இருப்பதுபோல், இதன் ஹேண்ட்டில் பார் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக இருந்தது, அந்த ரைடரின் ரைடிங் பொசிஷனை வைத்துக் கண்டுபிடிக்க முடிந்தது. இரண்டிலுமே இரண்டு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக்ஸ், ட்வின் ஷாக் அப்ஸார்பரும் இருந்தன. ஹிமாலயனும் டூரரும் ஃபுல் பிளாக் தீமில், இரண்டு பக்க அலாய் வீல்களுடன் அகலமான டயர்களுடன் கெத்தாக இருந்தன.

அலாய் வீல்
அலாய் வீல்

கூடவே, புல்லட் க்ளாஸிக் 350–யும், அதே மீட்டியார் இன்ஜினோடு வரப் போகிறது என்பது தெரிந்த விஷயம்தான்! ஆக, ராயல் என்ஃபீல்டில் இருந்து நமக்குத் தெரிந்து 3 பைக்குகள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கின்றன.

டூரரா... புல்லட்டா… அட்வென்ச்சரா… எல்லாத்துக்கும் பதில் சொல்லக் காத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.