காமசூத்ரா கூறும் `யோனிப்பொருத்தம்’ என்றால் என்ன, ஏன் அவசியம்?|#VisualStory

இ.நிவேதா

திருமணப் பொருத்தங்களில் ஒன்றான `யோனிப் பொருத்தம்' பற்றி கட்டாயம் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் பொருத்தத்தில், ஆண் - பெண் பாலுறுப்புகளை, விலங்குகளின் பாலுறுப்புகளோடு பொருத்திப் பார்ப்பார்கள்.

திருமணம்

திருமண பந்தத்தில் நுழையவிருக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலுறுப்புகள் `சமரத'மாக, அதாவது பொருத்தமாக இருக்க வேண்டும் என்கிறது காமசூத்ரம்.

வாத்ஸாயனரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், தாம்பத்ய உறவின்போது, புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும்.

love couple | pixabay

அதற்குக் கணவன், மனைவி புணர்ச்சி உறுப்புகளின் அகல, நீள மற்றும் ஆழ அளவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும். உதாரணமாக, மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்ப கணவனின் புணர்ச்சி உறுப்பின் நீளம் இருக்க வேண்டும்.

couple | pixabay

அப்படியில்லாதபோது இருவருக்குமே தாம்பத்ய உறவில் திருப்தி கிடைக்காது. இந்த விஷயத்தைதான் `யோனிப்பொருத்தம்' மூலம் கண்டறிவதாக காமசூத்ரா சொல்கிறது.

இதுபற்றி மனநல மருத்துவர் ஷாலினி பேசும்போது, கல்யாணம் செஞ்சுக்கப்போற ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸுவலி கெமிஸ்ட்ரி நல்லா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிறதுதான் யோனிப் பொருத்தம்.

Doctor | Photo by Matheus Ferrero on Unsplash

ஆணோ, பெண்ணோ சிலருக்கு தாம்பத்ய உறவில் ஆர்வம் அதிகமிருக்கும்; சிலருக்கு குறைவா இருக்கும். இதை தெரிஞ்சுக்கிட்டு, யாருடன் யாரை சேர்க்கணும்கிறதை கண்டுபிடிக்கிற ஒரு வழியாதான் நான் யோனிப் பொருத்தத்தைப் பார்க்கிறேன்.

Sad Couple | Unsplash

இது திருமணத்துக்கு மிக மிக தேவைங்கிறதுதான் என்னோட கருத்தும். ஆனா, இதை சம்பந்தப்பட்டவங்களுடைய இயல்பை வெச்சுதான் கண்டுபிடிக்க முடியும்.

Couple (Representational Image) | Photo by Pablo Heimplatz on Unsplash

திருமணத்துக்குப் பிறகு குத்துமதிப்பா செக்ஸ் பண்ணிட்டோ, அல்லது, எனக்கு மட்டும் உச்சகட்டம் கிடைச்சா போதும்னோ ஆண் இருந்தா, பெண் நிலைமை கஷ்டம்தான்.

Couple (Representational Image) | Photo by cottonbro from Pexels

பரஸ்பரம் உருவம் பிடிச்சிருக்கணும்; குணம் பிடிச்சிருக்கணும். 'இவனோட/இவளோட ஒரே அறையை பகிர்ந்துக்க எனக்குப் பிடிச்சிருக்கு'னு மனசு சொல்லணும். அதுக்காக மனசு கொஞ்சம் ஏங்கவும் செய்யணும். அதுதான் கெமிஸ்ட்ரி.

Couple | Representational Image

முக்கியமா, பரஸ்பரம் உடல்களைப் பகிர்ந்துக்கிறதை பத்தி யோசிக்கிறப்போ, 'இவன்கூடவா/இவகூடவா...'னு அருவருப்பு வரவே கூடாது. அப்படி வந்தா, ரெண்டு பேருக்கு நடுவுல யோனிப்பொருத்தம் இல்ல. அதாவது, கெமிஸ்ட்ரி இல்லைன்னு அர்த்தம்'' என்கிறார்.

Couple | Image by Free-Photos from Pixabay