'கதை வசனம் மட்டும் போதாது...' 'டைரக்டர்கூடவே இருக்கணும்...' #AppExclusive

7 Min Read

“சினிமாவிலே இன்னொரு விஷயம் தெரியுமா?”1984ல் வெளிவந்த விசு, எஸ்.வி.சேகரின் சுவாரஸ்ய உடையாடல்கள் இதோ உங்களுக்காக

Published:Updated:
Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview
0Comments
Share

சேகர் : சினிமாவிலே நிலைமை எப்ப. எப்படி மாறும்னே சொல்ல முடியாது...

விசு : கரெக்ட்! ஒரு படத்துக்கு ஒப்புக் கிட்ட நாளிலிருந்து படம் ரிலீஸாகும் நாள் வரை என்ன வேணுமானாலும் நடக்கலாம். நம்ம மார்க்கெட் நல்லா யிருக்கிற போது புக் பண்ணி, நடுவிலே நீங்க ரெண்டு படம் ஊத்திட்டீங்கன்னு வெச்சிக்குங்க - நான் ஊத்தியிருக்கேன் அந்த மாதிரி நிலையிலே ஜாக்பாட் சீனுவாசன் மாதிரி ஒரு தயாரிப்பாளர் எனக்குக் கிடைக்கலேன்னா இன்னிக்கு நான் இந்தத் தொழில்லே இருந்திருக்கவே மாட்டேன்.

ஏன்னா, 'கண்மணிப் பூங்கா'வும் 'ஒரு கை பார்ப்போம்' படமும் ஊத்தினதுக்கு அப்புறமும் என்னை வெச்சுப் படம் எடுத்துத் தைரியமா தியேட்டர்லே ரிலீஸ் பண்ணினார் அவர். அவர்கிட்டே, 'என் படம் நல்லா ஓடின சமயத்திலே கொடுத்த சம்பளம் கொடுங்க'ன்னு நான் போய்க் கேட்கலாமா? அதே சமயம் ஒரு படத்துக்குக் குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கிட்டு, படம் ரிலீஸாகும்போது நம்ம மார்க்கெட் உயர்ந்துட்டா, 'இப்ப என் மார்க்கெட் படி நிறைய விலைக்கு வித்திருக்கீங்க... எனக்கு அதிகச் சம்பளம் கொடுங்க'ன்னு கேட்கறதும் சரியில்லே.

Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview

சேகர் : 'ஸ்பரிசம்' படத்துக்கு நான் மூவாயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கிட்டேன். அதுலே நடிச்சு முடிக்கறதுக்குள்ளே என்னோட பதினைஞ்சு, பதினாறு படங்க ரிலீஸாயிடுச்சு... சம்பளமும் ஆறு, ஏழு மடங்கு உயர்ந்துட்டுது... இருந்தும் படம் ரிலீஸாகும் போது.

முதல்லே பேசின அதே பணம்தான் அந்தப் படத்துக்கு வாங்கினேன். இன்னொண்ணு பாரு.. சினிமாவைப் பொறுத்தவரை காமிரா, லைட் இதெல்லாம் ஸ்பாட்டுக்கு வந்தப் புறம் ஷூட்டிங் கான்சல் ஆனா அதுக்குக் கொஞ்சம் பணம் உண்டு. ஆனால், நடிகர்களைப் பொறுத்தவரை அப்படி இல்லே.... ஏன்னா நாம எதையும் எடுத்துக்கிட்டுப் போறதில்லே... நம்ம நடிப்பைப் பையிலேயா போட்டு எடுத்துக்கிட்டுப் போறோம்..? ' சார், உங்களுக்காக இதைக் கொண்டு வந்துட்டேன். கான்சல் ஆனதுக்கு ஏதாவது குடுங்க'ன்னு கேட்கவா முடியும்.....?

விசு : 'சினிமாவுக்கு வந்தப்புறமும் சேகர் டிராமா ஃபீல்டை மறக்கலே... நீங்க மறந்துட்டீங்களே'ன்னு பல பேர் என்னைக் கேக்கறாங்க....

சேகர் : இப்ப நீ ஒரு டைரக்டர். என்னை மாதிரி நடிகன் மட்டும் இல்லையே...

விசு : யெஸ்.... டைரக்டர்னா அந்தப் படம் முடியறவரை கூடவே இருக்கணும்... கதை வசனகர்த்தானா ஆறு மாசமாவது இருக்கணும்... பாட்டு 'கம்போசிங்'னா டைரக்டர் போகணும்..

ஸ்டண்டுன்னா டைரக்டர் போகணும்... டான்ஸுன்னா டைரக்டர் போகணும்... ஆனா, இதை யெல்லாம் மீறி இந்த வருஷக் கடைசிக் குள்ளே எப்படியும் ஒரு டிராமாவை மேடை ஏத்திடறதுன்னு தீர்மானம் செஞ்சிருக்கேன்.

சேகர் : நிஜமாவா?

விசு : ஆமாம்!

சேகர் : நீயே போடற மாதிரியா?

விசு : யார் போடறது. எப்படிப் போடறதுன்னு இன்னும் முடிவு பண்ணலே. உன்னை மாதிரி என்னாலே நினைச்சா மேடையேறிட முடியுமா? உன்னை மாதிரி 6.50 - க்கு நான் டிராமா தியேட்டருக்குப் போகமாட்டேன். ஆறு மணிக் கெல்லாம் போயிடுவேன்.

சேகர் : நானும் ஆறு மணிக்கெல்லாம் தியேட்டருக்குப் போயிடுவேன்...

விசு : ஆனா நண்பர்களோட அரட்டை யடிச்சுகிட்டிருப்பே.. கடைசி நிமிஷத்துலே மேக்கப் போட்டுகிட்டு, மணியடிச்சதும் ஸ்டேஜ்லே நுழைவே....!

சேகர் : மேக்கப் போட்டுக்க ரெண்டு நிமிஷம் ஆறதேன்னு. இப்பல்லாம் அது கூடப் போட்டுக்கறது கிடையாது! ஸ்டூடியோவிலிருந்து நேரே டிராமாவுக்குப் போனா முதல் காட்சிக்கு என்ன டிரஸ்ஸோ அந்த டிரஸ்ஸோடயே போயிடுவேன்....

விசு : என்னாலே அது முடியாதுப்பா. எனக்கு மேக்கப் போட்ட பிறகு டயலாக்ஸ் எல்லாம் சொல்லிப் பார்த்துக்கக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கணும். இப்ப இன்னொரு பாயிண்ட்டும் சொல்லணும்.... மனோகர் டிராமா... எஸ்.வி. சகஸ்ரநாமம் டிராமான்னா மணிக்கு கரெக்டா வந்துடுவாங்க.... எங்க டிராமாவுக்கு அப்படி வரமாட்டாங்க.... கொஞ்சம் ரிலாக்ஸ்டாத்தான் வருவாங்க... அண்ணாமலை மன்றத்திலே கான்ட்டீன் பக்கத்திலே கும்பல் இருந்துக் கிட்டே இருக்கும். இருக்கும். நாங்க டிராமா ஆரம்பிச்சாத்தான் அவங்க உள்ளே நுழைவாங்க. அவங்க உள்ளே வந்தாத்தான் நாங்க ஆரம்பிக்கிறதா இருப்போம்.. முடியவே ஆடியன்ஸும் இந்தப் போட்டியிலே நான்தான் தோத்துப் போவேன்... நாடகம் தொடங்கினதும் வந்துகிட்டேயிருப்படிங்க... அதனாலே நாடகத்திலே முதல் சீனிலும் இண்டர் வெல்லுக்கு அடுத்த சீனிலும் நான் கதையே சொல்ற வழக்கமில்லே...

Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview

சேகர் : இந்த மாதிரி பிரச்னைக்காகத் தான் நான் நாடகம் முழுவதும் கதையே சொல்றது இல்லே...!

விசு : உன் நாடக அரங்கேற்றத்தோட சேர்த்தே நீ டேட்ஸ் வாங்கிடுவே இல்லே..?

சேகர் : முன்னேல்லாம் வரிசையா 'டேட்ஸ்' வாங்கிடுவோம். இப்ப அப்படிச் செய்யறது இல்லே... ஒரு சமயம் ஒரு புது நாடகத்துக்கு இனாகுரேஷனோட சேர்ந்த மாதிரி முப்பது 'டேட்ஸ்' வாங்கி வெச்சிருந்தோம். பயங்கரமா ஃபிளாப் ஆயிட்டுது. கஷ்டப்பட்டு 12 டிராமா போட்டுட்டு பாக்கி 18 தேதிகளை கான்ஸல் பண்ணிட்டோம்.

விசு : நாங்க புது நாடகம் போட்டா முதல் நாடகத்துக்கும் இரண்டாவது நாடகத்துக்கும் இடையே பத்து நாள் இடைவெளி விடுவோம். அப்ப எங்க நாடகத்தில் உள்ள குறைகளைத் திருத்திப் போம். சினிமாவிலே அப்படி இல்லே... ஒரு டைரக்டர் படத்தை முடிச்சு முதல் காப்பியைத் தயாரிப்பாளர் வாங்கிக் கிட்ட உடனே நம்ம பொறுப்பு முடிஞ்சு போச்சு, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கிட்டே படத்தைக் கொடுத்துட்டா அதோட அவர் பொறுப்பு ஓவர்.

Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview

சேகர் : முன்னேல்லாம் சில காட்சிகள் நல்லா இல்லேன்னா தியேட்டர் தியேட்டரா போய் வெட்டிடுவாங்க... இப்பவும் சில பேர் அப்படிப் பண்றாங்களாம். இதைச் சொல்றியே... ஒரு காட்சி அந்த ஊர்லே ஜனங்களுக்கு பிடிக்கலேன்னா தியேட்டர் ஆபரோட்டரே அதை வெட்டி வெச்சி பாரு.. அப்படி மோசம்னு வெட்டப்பட்ட பாட்டு மட்டும் அப்படியே புதுசா இருக்கும். அதை டி.வி-க்குக் கொடுத்துடலாம்!

விசு : பாட்டு மோசமானா டி.வி-க்குக் கொடுத்து!லாம்னு சொல்றியா, இல்லே டி.வி-யிலேயே மோசமான பாட்டுதான் போட்டாங்கன்னு சொல்றியா?

சேகர் : ரெண்டும் ஒண்ணுதானே! மோசமான விஷயம்னு சொன்னதும் ஒண்ணு ஞாபகம் வருது... எங்க புது டிராமாவிலே ஒரு டயலாக் வெச்சிருக்கோம். ஒரு எம்.எல்.ஏ. மேலே ஜனங்களுக்குப் பயங்கரமான வெறுப்பு வரணும்...' அதுக்கு என்ன வழின்னு ஒருத்தன் கேட்கறான். 'ரொம்ப சுலபமான வழி.. பேசாம அவரை டி.வி. டிராமாவிலே நடிக்க வெச்சிடலாம்'ங்கிறான்... இதனாலே எல்லா டிராமாவும் மோசம்னு சொல்லலே.. முக்கால்வாசி மோசமா இருக்கு, எதிரொலிலே டிராமாவுக்காக வருத்தப்படறத்துக்கே நேரம் போறமாட்டேங்குது...! மூன்னே அப்படித்தான் நான்ஒரு டி.வி. டிராமா பண்ணிட்டு கிட்டத் தட்ட ஒரு மாசம் எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். என் வாய் வலிச்சுப் போச்சு. போறவங்க வரவங்க எல்லாம் வருத்தம் தெரிவிச்சாங்க... ஆனா சில நல்ல டிராமாக்களும் வருது.

Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview

விசு : நானும் கிட்டத்தட்ட பத்து வருஷமா மக்களைக் கவரும்படி நாடகம் போட்டிருக்கேன்.... நடிகனாகி, எழுத்தாளனாகி, டைரக்டராவும் ஆகியிருக்கேன். உண்மையிலேயே டி.வி - காரங்க கல்சரையெல்லாம் பிரமோட் பண்றவங்களா இருந்தா ஏன் இதுவரை அவங்க என்னைக் கூப்பிடலே... நான் அங்கே போய் நிப்பேன்னு எதிர்பார்க்கிறாங்களா..? நான் அங்கே போனா எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்னு எனக்குத் தெரியும்... வாங்க.... டிஸ்கஸ் பண்ணுவோம்'னு ஒரு லெட்டர் போடக் கூடாதா?

சேகர் : அப்படிச் செய்ய இது என்ன ஆல் இந்திய ரேடியோவா..? முன்னே நீ, நான், மௌலி, கிரேஸிமோகன் எல்லாம் சேர்ந்து ' ரே.ஐ.ஆர்.'லே ஒரு ஃபெஸ்டிவல் நடத்தினோம். ஒரு டிராமா நல்லாயிருந்தா நானே பல முறை அவங்ககிட்டே சொல்லி யிருக்கேன். அந்த எழுத்தாளர் நல்லா எழுதியிருக்கார்னு... அவங்க அவரைக் கூப்பிட்டு அடுத்த நாடகத்தை எழுதச் சொல்வாங்க..

விசு : ஆல் இந்திய ரேடியோ அந்த வகையிலே கரெக்ட். திறமை இருந்தா போன் பண்ணிக் கூப்பிடுவாங்க... அங்கே பாலன்ட்ஸை பிரமோட் பண்றாங்க.. இங்கே தெரிஞ்சவங்களைத்தான் பிரமோட் பண்றாங்க.....

விசு : ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கு இருக்கா வரவேற்பு ஒரு டி.வி. டிராமா வுக்கு இருக்கா? இதிலேருந்து சினிமாவில் இருக்கறவங்களை மக்களுக்குப் பிடிச்சிருக் குன்னுதானே அர்த்தம்? அப்ப முழுப் பொறுப்பையும் ஒரு சினிமாக்காரர் கிட்டே கொடுக்கட்டும்... நாற்பத்தைந்து நிமிஷத்துக்கு ஒரு பண்ணச் சொல்லட்டும்.

சேகர் : அவங்களுக்கு ஒரு பட்ஜெட் இருக்கு அதுக்குள் ளேதான் அவங்க ரோக்ராம் நடத்தியாகணும்... விசு ; சரி வேறே சப்ஜெக்ட்டுக்குப் போவோம் பத்திரிகைகள் சின்ன - ரூப் முதல் நாடகம் போட்ட உடனேயே அதைக் கிழிகிழின்னு கிழிச்சுட முங்க... இது தப்பு... அப்புறம் அவங்க வளரவே சான்ஸ் இல்லாம போயிடும்... முதல் லே நான் யார் குற்றவாளி? ' ன்னு போட்டேன்.

தலைமை த + வந்த நாவலர் நெடுஞ்செழியன், இதிலே யார் குற்றவாளி.? சபாக்காரங்களை நடிச்சவங்களா, நாடகம் பார்க்க வந்த நாமா..? ' அப்படி இப்படின்னு பேசிட்டார். இன்னொரு நாடகாசிரியனா இருந்தா அதுக்கப்புறம் தொட்டிருக்கவே மாட்டான்.. ஆனா, அதை நான் ஒரு ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டேன். அதனாலே பிழைச்சேன். எல்லாரும் அப்படி இருப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா? விமரிசனத்தைத் தாங்கற சக்திக்கு ஒரு ஸ்டேஜ் இருக்க... முதல்லே அவங்க ஆதரிக்கப்படணும். ஒரு குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போதே கேலி பண்ணக் ரது சரி... நீ நல்லாத்தான் நடக்கறே, இப்படி வெச்சு இப்படிப் போகணும் னு எங்கரேஜ் பண்ணணும். புஸ்கரேஜ் பண்ணக்கூடாது...

இப்ப சில விமரிசகர்கள் தங்களுடைய எழுத்துத் திறமையையும் மேதி லாசத்தையும் காட்டத்தான் ஆசைப் படறாங்களே தவிர, எங்ரேஜ் பண்ணணும்னு நினைக்கிறதில்லே.... என் பிரதர் ராஜாமணி'நாலு பேருக்கு நன்றி ' ன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணினான். அவுட்டோர் ஷூட்டிங்கை பார்த்துட்டு, ' யார் யார்தான் டைரக்ட் பண்றதுன்னு கிடையாதா? ன்னு விகடன்லே ஒருத்தர் எழுதினாரு. இவன் டைரக்ஷனுக்கு லாயக் கில்லைன்னு அவருக்கு எப்படித் தெரியும்..? படம் வந்தாத் தானே அதைத் தீர்மானிக்க முடியும்? ராஜாமணி பதினைஞ்சு வருஷமா டிராமா ஃபீல்டுலே இருக்கான்... ஏழு வருஷமா ஒரு டைரக்டர்கிட்டே. ஓர்க் பண்ணியிருக்கான்... டைட்டில் கார்டுலே பெயர் வரவில்லைன்னாலும் அவனுக்கு அனுபவம் இருக்கு... நாளைக்கு நீயே ஒரு படத்தை டைரக்ட் பண்ணலாம்.. டரக்ஷனுக்கு எக்ஸ்பீரியன்ஸ்தான் வேணும்... எக்ஸ்பீரியன்ஸ் உள்ள யாரும் டைரக்ட் பண்ணலாம். இந்தப் படத்தில் இந்தக் காட்சியை இந்த டைரக்டர் நல்லா பண்ணிட்டாருன்னு தட்டினா டைரக்டருக்குப் பெரிய பெருமை இல்லை.... ஆனால், படம் முடிஞ்ச பிறகு ஜனங்க வெளியே வந்து கதையைக் கோவையா எடுத்துச் சொன்ன இந்த டைாகடர் யாருன்னு கேட்டா அதுதான் அந்த டைரக்டருக்கு வெற்றி. நாடக பாணி, நாடக பாணின்னு சொல்லப்பட்ட என் படங்கள் எல்லாம் வெற்றிகரமா ஓடியிருக்கு ; ' குடும்பம் ஒரு கதம்பம்.. ' ' மணல் கயிறு ' இதெல்லாம் நூறு நாட்களுக்கு மேலே போச்சு....

சேகர் : சினிமா ஒரு விஷவல் மீடியம் என்பதால் கதை, வசனம் மட்டும் அதுக்கு ஒரு ரேடியோ

டிராமாவையே கேட்டுடலாமே.... இதே உன் ' பட்டினப் பிரவேசம் ' டிராமா போடும்போது அந்த ரயில் சப்தம் அதுக்கெல்லாம் உள்ளே இருந்து நான் தான் எஃபெக்ட் கொடுத்தேன்.. படத்திலே அவன் அந்த ரயில்லே மோதி வெளியே விழறதை விஷுவலா காட்டலாமே... இதே கதைதான் அதுவும்... ' ஏன்யா ஒரு ரயிலைக்கூடக் காட்ட முடியலையா'ன்னு ஜனங்க கூடக் கேட்பாங்க...

Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview

விசு : அதை நான் ஒத்துக்கறேன். சமீபத்திலே ' படகோட்டி ' படம் பார்த்தேன். எட்டு பாட்டுதான். எட்டு பாட்டும் சூப்பர்ப்...! ஒக்காந்து எண்ணினேன். ஒரு பாட்டை 20 ஷாட்டி லிருந்து 25 ஷாட்டுக்குள்ளேதான் எடுத் திருக்காங்க... ஆனால், இன்னிக்கு ஒரு படத்திலே 120 - லிருந்து 150 ஷாட் எடுக்கற பாடல்களில் இருக்கும் இன்ட்ரெஸ்ட்டை விட அதிலே எனக்கு அதிகம் இன்ட்ரெஸ்ட் இருந்தது.

சேகர் : ஐ.வி. சசி படம் ' அவளோட ராவுகள் ' வந்ததே, அதிலே ஒரு பாட்டுக்கு ரெண்டே ரெண்டு ஷாட்தான்.... எக்ஸ்ட்ராட்னரியா இருந்தது... இப்ப நேரம் இருந்தா நிறைய எடுக்கறாங்க.... இல்லே.. குறைந்த ஷாட்டுகள்லே பாடலை முடிச்சுடுறாங்க. சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதால் ரசிகர்களும் கண்ணுக்குக் கொஞ்சம் எதிர்பார்க்கிறாங்க... சூரியோதயக் காட்சி அப்படி இப்படி....

Visu and S.V.Shekhar Interview
Visu and S.V.Shekhar Interview

விசு : அந்த அழகான சூரியோதயக் காட்சி மட்டும் இருந்துட்டா படம் ஓடிடுமா? அந்த நாள்லே செட்டுக் குள்ளேயே பலமான கதையோட வலுவான வசனத்தோட படம் எடுக்கப் பட்டு ஓடலியா.... நாங்ககூட தமாஷா சொல்லுவோம். ' அடுக்கு மல்லி ' யிலே படத்தைவிட சவுண்டு டிராக் நீளம் அதிகம்னு... அந்தப் படம் ஓடலியா? அதனாலே மக்கள் ஒன்றிப் போகக் கூடிய கதை... ஜீவன் உள்ள கதை சூப்பர்ப் பர்ஃபாமென்ஸ் எல்லாம் இருந்தா படம் சூப்பர் ஹிட் ஆகும்.

சேகர் : கதையை ஒழுங்கா சொல்ல வேண்டியதுதான். அதோட, வளர்ந்துவரும் விஞ்ஞான வசதிகளையும் உபயோகித்துக் கொள் ளலாம் என்று தான் சொல்றேன். ' பயணங்கள் முடிவதில்லை ' நான் படத்தை முதல்லே நானும் மோகனும் பார்த்துட்டு நாலு நாள் கூடப் போகாதுன்னு பேசிக்கிட்டோம். கடைசிலே படம் பிரமாதமா போச்சு. காரணம். நீ சொன்னபடி அதிலே கதை ஒழுங்காகச் சொல்லப்பட்டிருந்தது.

விசு : சினிமாவிலே இன்னொரு விஷயம் தெரியுமா? ஒரு நடிகரிடம் இருக்கும் பாணியைக் காப்பியடித்து இன்னொருவர் அப்படியே செய்தால் அவர் நிலைத்து நிற்க முடியாது. எனக்குத் தெரிந்து, என்னைப் போல ஒருத்தர் நடிச்சார்... சினிமாலே எடுபடாம போயிட்டார், பாவம். ஒவ்வொருவருக்கும் தனித் தனி பாணி வேண்டும். தனித்தன்மை வேண்டும். இன்னொண்ணும் சொல்லணும். டைரக்டர் பாலசந்தர். எஸ் பி. முத்து ராமன், முக்தா சீனிவாசன் இவர்கள் எல்லாம் என் வழிகாட்டிகளா அமைஞ்சதுக்கு நான் ரொம்ப பெருமைப் படறேன். ' எப்படிப் படம் எடுத்துப் பாமர மக்களுக்கு விளங்க வைக்கணும்'னு முக்தா சீனிவாசன் ரொம்ப பாடுபடுவார். ' விசு. நீ சொல்ற கதை எனக்கு மட்டும் புரிஞ்சா போதாது.... எங்க வீட்டு வேலைக் காரனுக்கும் புரியணும்'னு சொல்வார். பாலசந்தர் மக்களுக்குப் புதுசு புதுசா சொல்லணும்னு ஆசைப்படுவார். அதிலே அவர் ஜீனியஸ். எஸ் பி. முத்துராமன் கிட்டே பணிவு, அடக்கம், பண்பு இது மூன்றும் கத்துக்கிட்டேன்.

சேகர் : டிராமாவைப் பொறுத்தவரைக்கும் நான் ஆடியன்ஸைத்தான் நம்பறேன், அவர்கள்தான் கடைசி ஜட்ஜ்... சந்தேக மில்லாம நம்ம வெற்றிக்கும் தோல்விக்கும் அவங்ககிட்டே நாம் வளர்த்துக்கற இமேஜ்தான் காரணம்.

விசு : நூத்துக்கு நூறு ஒப்புக்கறேன், நான் கெட்டவன்... நான் அயோக்கியத் தனமான வழியிலே போறவன், சண்டை போடறவன்னு காட்டினதுனாலேதான் என் ஒரு கை ஓசை ' அவுட்... எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு காட்டினதுனாலே தான் ' கண்மணிப் பூங்கா ' அவுட். அதே ' ஊருக்கு உபதேசம் ' பார்... படத்திலே ஒரு ப்ராப்ளத்தை விசுகிட்டே கொடுத்துட்டா சால்வ் பண்ணுவான்னு எண்ணம் உண்டாயிடுச்சு.... அதனாலேதான் அது நல்லா போச்சு....

சேகர் : நாடகத்திலேயும் அப்படித்தான். என் ரசிகர்கள் என் பாணி நாடகத்தைத் தான் விரும்பறாங்க..... விசு ரசிகர்கள் விசு பாணிதான் விரும்புவாங்க. நான் போய் ' நள்ளிரவில் பெற்றோம் ' மாதிரி டிராமா போட்டா யார் பார்ப்பாங்க?

தொகுப்பு - பாலா

வண்ணப் படங்கள் - ரங்கீஷ்

(22.07.1984, 29.07.1984 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து....)