சினிமா
தொடர்கள்

வட்டம் - சினிமா விமர்சனம்

படத்தை நல்ல த்ரில்லராக மாறவிடாமல் தடுப்பது நெடுக விரவியிருக்கும் லாஜிக் குறைபாடுகள்தான்

Published:Updated:
வட்டம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
வட்டம் - சினிமா விமர்சனம்
Comments
Share

ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை இணைக்கும் ஹைப்பர்லிங்க் சினிமாவே இந்த ‘வட்டம்.'

வேலையை விட்டு நீக்கப்பட்ட நான்கு ஐ.டி இளைஞர்கள் தங்கள் முதலாளியின் மகனைக் கடத்துவதற்குத் திட்டமிடுகிறார்கள். மறுபக்கம் ‘குடியே கடமை' என போதையில் உழலும் சிபி சத்யராஜ் தொழிலதிபரான வம்சியைத் துப்பாக்கி முனையில் கடத்துகிறார். சிபி சத்யராஜ் யார், அவர் ஏன் வம்சியைக் கடத்தவேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதில் சொல்லி, அது முந்தைய கடத்தலோடு இணையும் முடிச்சை அவிழ்த்து, இறுதியாய் மெசேஜ் சொல்லி முடிகிறது படம்.

சிபி சத்யராஜுக்கு அலட்டல், ஆர்ப்பாட்ட மில்லாத சிம்பிளான கதாபாத்திரம். கடத்தல் காட்சிகளில்கூட பதற்றம் தேவைப்பட்டிராத ரிலாக்ஸான ரோலை எளிதாகக் கையாண்டிருக்கிறார். ஒருசில காட்சிகளே என்றாலும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரமும் நடிப்பும் அழுத்தம். மற்றொரு நாயகியான அதுல்யா நடிப்பில் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம். வம்சி கிருஷ்ணா, சசி, பால சரவணன், சைத்ரா ரெட்டி, பிரசன்னா பாலச்சந்திரன் என ஏகப்பட்ட நடிகர்கள் என்றாலும் சசி மட்டுமே கூட்டத்தில் தனித்துத் தெரிகிறார்.