``வீரர்களுக்கு வயாகரா கொடுத்தனுப்பும் ரஷ்யா; பாலியல் வன்முறைகளே ராணுவ யுக்தி” - ஐ.நா பிரதிநிதி

ரஷ்யா - உக்ரைன் போரின் ஒரு பகுதியாக, உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன என ஐ.நா பிரதிநிதி ஒருவர் ரஷ்யா மீது குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
ரஷ்யா - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன்
0Comments
Share

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், மோதல் இன்றும் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், போரில் பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளனவா என்று கேள்வி எழுப்பிய செய்தி ஊடகமான AFP-க்கு ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பாட்டன் அளித்த பேட்டியில், ``ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து உக்ரைன் கொடூரமாகக் காட்சியளிக்கிறது. ரஷ்யா உக்ரைனின் மீது நடத்திய போரில் பாலியல் வன்முறையை 'ராணுவ யுக்தியாக' பயன்படுத்தியுள்ளது. ரஷ்ய, தன் ராணுவ வீரர்களுக்கு வயாகரா மாத்திரைகளை வழங்கியிருக்கிறது. உக்ரைன் நகரங்களின் தெருக்களில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சடலங்கள் ரஷ்யாவின் கேவலமான போர் நெறியைக் காட்டுகின்றன. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனில் பாலியல் வன்முறைகள் நடப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன.

``வீரர்களுக்கு வயாகரா கொடுத்தனுப்பும் ரஷ்யா; பாலியல் வன்முறைகளே ராணுவ யுக்தி” - ஐ.நா பிரதிநிதி
Efrem Lukatsky

மேலும் ரஷ்ய வீரர்களுக்கு வயாகரா மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. வயாகரா ஆண்களுக்குப் பாலியல் உணர்வை தூண்டும் மருந்து. இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வருகின்றன.

பெண்களைப் பல நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்தும், சிறுவர்கள் மற்றும் ஆண்களிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டிருக்கின்றனர். 4 வயது முதல் 82 வயதுள்ள பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். பிறப்புறுப்புச் சிதைவுகள் இதற்கு ஆதாரம்.

``வீரர்களுக்கு வயாகரா கொடுத்தனுப்பும் ரஷ்யா; பாலியல் வன்முறைகளே ராணுவ யுக்தி” - ஐ.நா பிரதிநிதி

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்தேறியுள்ளன. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கைகள் இதைவிட அதிகமாக இருக்கும் எனச் சந்தேகிக்கிறோம். ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து பல பெண்கள் பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க ரஷ்யா, பெண்கள் மீதான பாலியல் வன்முறையையே போர் யுக்தியாகப் பயன்படுத்தியுள்ளது " என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் உக்ரைனின் உள்துறை துணை அமைச்சர் கேத்தரீனா பௌலிச்சென்கோ, பாலியல் குற்றங்கள் குறித்து ரஷ்ய வீரர்கள் மீது 50 புகார்கள் வந்துள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.