இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது ஐக்கிய அரபு அமீரகம்; காரணம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த திடீர் முடிவின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள் என்ன? இது இரு நாடுகளுக்குமே இழப்பு என்பதால், இரு நாடுகளும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு.

Published:Updated:
கோதுமை
கோதுமை
0Comments
Share

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. உக்ரைன் - ரஷ்ய போரின்போது கோதுமையை விநியோகிப்பதில், உக்ரைனுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது உலக நாடுகளின் பார்வை முழுவதும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. பல நாடுகளும் தங்களின் கோதுமை தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என நம்பியபோது, அதிர்ச்சி அளிக்கும் வகையில், கோதுமை ஏற்றுமதிக்கு மே 14-ம் தேதியன்று தடை விதித்தது இந்திய அரசு.

ஏற்றுமதி
ஏற்றுமதி

ஆனால், ஏற்கெனவே முடிவான ஒப்பந்தங்களுக்கான கோதுமையை அதற்கான நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவுக்குத் தடை விதித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடை அடுத்து வரும் 4 மாதங்களுக்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், மே 14-ம் தேதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய கோதுமையை ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் கோதுமை அறுவடை
பஞ்சாப் கோதுமை அறுவடை

சர்வதேச அளவில் நிகழும் அசாதாரண சூழலால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு தேவையை அடிப்படையாக வைத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.