திருச்செந்தூர்: பணம் பெற்றுக்கொண்டு அழைத்துச் சென்ற அர்ச்சகர்?! - போலீஸைத் தாக்கியதால் சர்ச்சை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணம் பெற்றுக்கொண்டு, தரிசனத்துக்காக பக்தர்களை கோயிலுக்குள் அழைத்து செல்ல முயன்ற அர்ச்சகரை போலீஸார் தடுத்தனர். இதனால், அர்ச்சகர்கள் கும்பலாகச் சேர்ந்து போலீஸாரை அடித்ததாக சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருச்செந்தூர்
திருச்செந்தூர்
0Comments
Share

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. தினமும் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்துவருகின்றனர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

இந்தக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்குக் கட்டுபாடுகள் இருக்கின்றன. ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் ஆகிய இரண்டு வழிகளில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர, 60 வயதைக் கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டண மற்றும் பொது தரிசன வரிசைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

இந்த நிலையில், அர்ச்சகர் ஒருவர் சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மூத்த குடிமக்கள் செல்லும் வரிசையில் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்த வரிசையின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பட்டாலியன் போலீஸார் அந்த அர்ச்சகரையும், பக்தர்களையும் தடுத்திருக்கின்றனர். இதனால் கோபமடைந்த அர்ச்சகர்கள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பட்டாலியன் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படுகிறது.

வாக்குவாதம்
வாக்குவாதம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரை அர்ச்சகர் அடித்து தள்ளியதாகச் சொல்லப்படுகிறது. இதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்தனர். உடனடியாக திருக்கோயில் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். இது குறித்து போலீஸாரிடம் பேசினோம், ``100 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம், மூத்த குடிமக்களுக்கான இலவச விரைவு தரிசனப் பாதை ஆகிய மூன்று வழிகளில்தான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகமாவதால் தரிசனத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகிறோம். ஆனால், அர்சகர்கள் விரைவாக தரிசனத்கு அழைத்துச் செல்கிறோம் என பணத்தைப் பெற்றுக்கொண்டு மூத்த குடிமக்கள் வரிசையில் பக்தர்களை கோயிலுக்குள் அழைத்துக்கொண்டு போகிறார்கள். இதைப் பார்த்த மற்ற பக்தர்கள் எங்களிடம் புகார் சொல்கிறார்கள். இப்படி அழைத்துச் செல்வது ஒரு முறை ரெண்டு முறை அல்ல, அடிக்கடி இப்படித்தான் அழைத்துக்கொண்டு போகிறார்கள்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

அவர்கள் செய்யும் தவற்றைத் தட்டிக்கேட்டால் எங்களிடம் வாக்குவாதம் செய்கிறார்கள். இப்போ போலீஸையே கீழே பிடித்ட்துத் தள்ளும் அளவுக்கு இது முற்றிவிட்டது” என்கிறனர். திருக்கோயில் அதிகாரிகள் தரப்பில் பேசினோம் ``இது சம்பந்தமாக விசாரணை செய்துவருகிறோம்” என்றனர்.