`கழுதை பால் குடிங்க சார்!' - கழுதை பண்ணை நடத்தும் சாஃப்ட்வேர் இஞ்சினீயர் அழைப்பு

சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை ஆரம்பித்திருக்கிறார். கழுதை பண்ணையை ஆரம்பிக்க ஆர்வம் இருப்பவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறார்.

Published:Updated:
ஸ்ரீனிவாஸ் கவுடா
ஸ்ரீனிவாஸ் கவுடா
0Comments
Share

தமிழகத்தில் எத்தனையோ பேர் லட்சக்கணக்கில் கிடைக்கும் சம்பளத்தை கூட பார்க்காமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் போன்ற சொந்த தொழிலில் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். கர்நாடகா மாநிலம் மங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு புதுமையான ஒரு தொழிலை கையில் எடுத்திருக்கிறார். கழுதைப்பால் பண்ணையை ஆரம்பித்திருக்கிறார்.

கழுதை பண்ணை
கழுதை பண்ணை

மொத்தம் 42லட்சம் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பால் பண்ணையில் இப்போது 20 கழுதைகள் இருக்கின்றன. இது குறித்து கழுதைப்பால் பண்ணை உரிமையாளரும், சாப்ட்வேர் எஞ்சினியருமான ஸ்ரீனிவாஸ் கவுடா கூறுகையில், ''2020 வரை நான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன்.

இப்போது கழுதைபால் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தை தொடங்கி இருக்கிறேன். எங்களிடம் இப்போது 20 கழுதைகள் இருக்கின்றன. கழுதைப்பாலில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்களது கனவு.

ஸ்ரீனிவாஸ் கவுடா
ஸ்ரீனிவாஸ் கவுடா

தயக்கம் இல்லாம் கழுதைப் பாலைக் குடிக்கலாம். கழுதைப்பாலில் மருத்துவ குணம் இருக்கிறது. கழுதைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதனை பாதுகாக்கும் நோக்கில் இதை செயல்படுத்த முடிவு செய்தேன். ஆனால் மக்கள் எனது இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுக்கவில்லை. கழுதைப்பால் பாக்கெட் ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்தோம். எங்களுக்கு இதுவரை கழுதைப்பாலுக்கு ரூ.17 லட்சத்திற்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.

கழுதைப்பால் தற்போது 30 மில்லி 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. கவுடா ஆரம்பித்திருக்கும் கழுதைப்பால் பண்ணைக்கு தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து செல்கின்றனர். சிலர் இது போன்ற பண்ணையை ஆரம்பிக்க ஆலோசனையும் கேட்டு செல்கின்றனர். அப்படி ஆர்வம் இருப்பவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறார் கவுடா