ஃபேஸ்புக் மூலம் காதல்; நடிகர் ராஜ்கிரணின் மகளைக் கரம் பிடித்தார் சீரியல் நடிகர் முனீஸ்ராஜா!

"ராஜ்கிரண் வீட்டில் ராஜ்கிரண் மகளின் முடிவுக்குச் சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஜீனத்தின் அம்மா மட்டும் இன்னும் சமாதானம் ஆகவில்லை" என்கிறார்கள். இது குறித்து விசாரித்தோம்.

Published:Updated:
முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா, ராஜ்கிரண்
முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா, ராஜ்கிரண்
0Comments
Share
நடிகர் ராஜ்கிரணின் மகளுக்கும் நடிகர் சண்முகராஜனின் தம்பியும் சீரியல் நடிகருமான முனீஸ்ராஜாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

இயக்குநர் திருமுருகன் இயக்கி சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிக் கலக்கியவர் முனீஸ்ராஜா. நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி இவர். 'நாதஸ்வரம்' தொடரில் இவரின் ஸ்டைலான நடைக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு ஜீ தமிழ் சேனலில் 'முள்ளும் மலரும்' என்கிற தொடரில் ஹீரோவாக நடித்தார். பிறகு சினிமாவுக்கு வந்து சில திரைப்படங்களிலும் நடித்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

ராஜ்கிரண் குடும்பம்
ராஜ்கிரண் குடும்பம்

"ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ்ராஜாவுக்கும் இடையில் காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் இரண்டு பேர் வீட்டிலும் சில காரணங்களால் இந்தக் காதலை ஏற்கவில்லை. ஆனால் தொடர்ந்து இரு தரப்பிலும் சிலர் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதில் முனீஸ்ராஜாவின் வீட்டில் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

அதேநேரம் ராஜ்கிரண் வீட்டில் ராஜ்கிரண் மகளின் முடிவுக்குச் சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஜீனத்தின் அம்மா மட்டும் இன்னும் சமாதானம் ஆகவில்லை" என்கிற முனீஸ் ராஜாவின் நட்பு வட்டத்தினர், இந்த ஜோடி திருமணத்தைப் பதிவு செய்துவிட்டதாகவும் சொல்கின்றனர்.

முனீஸ்ராஜாவையே தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டோம்.

முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா
முனீஸ்ராஜா, ஜீனத் பிரியா

"ஆமாண்ணே... ஃபேஸ்புக் மூலமாத்தான் முதன் முதலா அந்தப் புள்ளையப் பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. மேற்கொண்டு என்ன நடக்கும்னுதான் எல்லாருக்குமே தெரியுமே. காதலிச்சு வந்தோம். அது அடுத்த கட்டத்துக்கு நகர்றப்ப பிரச்னை மேல பிரச்னை.

ஸ்கிரீன்ல நான் எல்லாரையும் சிரிக்க வைக்கிறவன். ஜாதி, மதம்னு பல விஷயங்கள் எங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக் குறுக்க நிக்குமான்னு யோசிச்சுப் பார்த்தா சிரிக்கறதா அழறதான்னே தெரியலை. ஒரு நல்ல விஷயம் நடக்கிறப்ப யார் மனசும் புண்படாமச் செய்யணும்கிறதுதான் என் விருப்பம். அதனால அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன். எப்படியாவது அடுத்த சில நாள்கள்ல எல்லாம் சுமூகமா முடிஞ்சு நல்லதா ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்றேன்" என முடித்துக் கொண்டார்.