NCERT: ``தேர்வு, பதற்றம், மன அழுத்தம்'': மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் - ஆய்வில் அதிர்ச்சி!

பள்ளி மாணவர்களின் மனநலன் குறித்து அறிய NCERT ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 36 மாநிலங்களிலிருந்து சுமார் 3.79 லட்சம் மாணவர்களிடம் நடந்த இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் சொல்வது என்ன?

Published:Updated:
பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
0Comments
Share

கல்வி என்பது குழந்தைகளை மேம்படுத்தவும், அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து வாழ்வின் சரியான பாதையில் பயணிக்க வைக்கவும் வேண்டும். ஆனால், கல்வியே மாணவர்களின் மனநலத்தையும் வாழ்வையும் சீர்குலைப்பதாக இருக்கக் கூடாது. பெருந்தொற்றின்போது பள்ளி மாணவர்களின் வாழ்வும், கல்விமுறையும் தலைகீழாகத் திருப்பிப் போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

எனவே, பள்ளி மாணவர்களின் மனநலன் குறித்து அறிந்து கொள்ள, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (National Council of Educational Research and Training- NCERT) ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 36 மாநிலங்களில் இருந்து சுமார் 3.79 லட்சம் மாணவர்களிடம் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு வெளியிட்ட ஆய்வின் முடிவுகள்:

* படிப்பு, தேர்வுகள் மற்றும் தேர்வின் முடிவுகள் போன்றவை பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் பதற்றத்துக்கு முக்கிய காரணம். இவற்றால் பாதிக்கப்படுவதாக 81 சதவிகித மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

* 51 சதவிகித மாணவர்கள் ஆன்லைனில் பாடம் கற்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

* கேள்விகளைக் கேட்பதில் 28 சதவிகித மாணவர்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

தேர்வுகள்
தேர்வுகள்
மாதிரி படம்

* 33 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சக பள்ளி மாணவர்களின் அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

* 73 சதவிகித மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கையில் திருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

* 45 சதவிகித மாணவர்கள் தங்களுடைய உடல் அமைப்பில் திருப்தி அடையவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

* 29 சதவிகித மாணவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.

* 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களில் 43 சதவிகிதத்தினர் மனநிலையில் தடுமாற்றங்களைக் கொண்டுள்ளனர்.

புத்தகம் தூக்கும் கைகளுக்கு, புத்தகங்களே சுமையாகிவிடக் கூடாது!