``முகக்கவசம் கட்டாயம்... எச்சரிக்கையாக இருங்கள்''; மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்!

ஒமிக்ரானின் உருமாறிய திரிபு BF.7 மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொண்டை வலி, சோர்வு, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுவது போன்றவை இந்த நோய்த் தொற்றின் அறிகுறிகள்.

Published:Updated:
Mask
Mask ( Pixabay )
0Comments
Share

கோவிட் - 19 தொடர்ந்து பல புதிய திரிபுகளாக உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரானின் உருமாறிய திரிபு BF.7 மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்.

ஒமிக்ரான்
ஒமிக்ரான்
pixa bay

ஒமிக்ரானின் புதிய திரிபு BF.7 ஆன்டிபாடிகளில் இருந்தும், தடுப்பூசிகளில் இருந்தும் தப்பிக்கலாம். இந்தத் திரிபு Omicron spawn என்றும் அழைக்கப்படுகிறது. சில வாரங்களிலேயே இதன் பரவல் வேகமாக அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொண்டைவலி, சோர்வு, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுவது போன்றவை இந்த நோய்த்தொற்றின் அறிகுறிகள். முந்தைய கோவிட் திரிபுகளின் அறிகுறிகளைப் போலவே BF.7 அறிகுறிகளும் இருக்கும்.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா பொதுச் சுகாதார நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் கோவிட் நோய்த்தொற்று குறித்து நாட்டின் தற்போதைய நிலையை ஆராய்ந்தார். நோய்த்தொற்றுப் பரவலைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டும் என்றும், அதோடு கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மான்சுக் மாண்டவியா
மான்சுக் மாண்டவியா
Twitter/@mansukhmandviya

சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு (sub variant) BF.7 மற்றும் BA.5.1.7 அதிவேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.