39 முறை நிராகரிப்பு; மனம் தளராமல் Google-ல் வேலை வாங்கிய இளைஞர்; சொல்லும் ரகசியம் இதுதான்!

அமெரிக்காவைச் சேர்ந்த டைலர் கோஹன் என்பவர் 39 முறை தொடர்ந்து விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டும் அதே கூகுள் நிறுவனத்தில் வேலை வாங்கியிருக்கிறார். வெற்றிக்கு அவர் சொல்லும் ரகசியம் இதுதான்.

Published:Updated:
Google
Google
0Comments
Share
நம் கனவுகளையும் இலக்குகளையும் அடையத் தோல்வியிலும் மனம் தளராமல் விடாமல் முயற்சிக்கும் குணமும் தன்னம்பிக்கையும் வேண்டும். அப்படி தனது கனவு நிறுவனத்தில் பணிபுரிய விடாமல் முயன்று நினைத்ததைச் சாதித்திருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டைலர் கோஹன்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த டைலர் கோஹன் என்பவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் அசோசியேட் மேனேஜராக ஸ்ட்ராட்டஜி & ஆபரேஷன் (Strategy & Ops) பிரிவில் பணிபுரிந்து வந்தவர். ஆனால் தொழில்நுட்ப உலகின் உச்சத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவு. இதற்காக அவர் பல முறை தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்குத் தனது resume-யை அனுப்பி விண்ணப்பித்துக் கொண்டே இருந்துள்ளார். 2019-ல் விண்ணப்பிக்க ஆரம்பித்த இவர் நான்கு வருடங்களாக 39 முறை ரிஜெக்ட் செய்யப்பட்டும் மனம் தளராமல் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.

டைலர் கோஹன் பகிர்ந்த பதிவு
டைலர் கோஹன் பகிர்ந்த பதிவு

இறுதியாக 39 வது முறை அவர் விண்ணப்பித்தபின் கூகுள் அவருக்கு பதிலளித்துள்ளது. பின்னர் கடந்த ஜூலை 19 -ம் தேதி அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது LinkedIn பக்கத்தில் பகிர்ந்த அவர் கூகுள் அனுப்பிய நற்செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தார். அதில் "விடாமுயற்சிக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் அளவுதான் வித்தியாசம் இருக்கிறது. அதை அறிய நான் இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். 39 நிராகரிப்புகள், 1 ஏற்பு" என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.