LIVE: Bharat Jodo Yatra ``இந்திய மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை..!" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Bharat Jodo Yatra: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியிலிருந்து பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குகிறார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra
0Comments
Share
Sep 07, 2022 06:30 PM IST

``தேசத்தை ஒற்றுமைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது!" - குமரி பொதுக்கூட்டத்தில் ராகுல்

LIVE: Bharat Jodo Yatra ``இந்திய மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை..!" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

குமரி பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, ``இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவரின் அடையாளம் தேசியக்கோடி. தேசியக்கொடி தமிழ்நாட்டுக்கு வருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வந்து செல்லும்போதும், மனநிறைவுடன் செல்கிறேன். தேசத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது என மக்கள் கருதுகின்றனர்.

LIVE: Bharat Jodo Yatra ``இந்திய மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை..!" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஒவ்வொரு மாநிலத்தையும், ஒவ்வொரு மொழியையும், ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது தேசியக்கொடி. தற்போது தேசியக்கொடி மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கிறது. ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்களை பா.ஜ.க புரிந்துகொள்ளவில்லை. எதிர்க்கட்சியினரை சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கட்டுப்படுத்த நினைக்கின்றனர்" என்றார்.

Sep 07, 2022 06:15 PM IST

`ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா... வா... வா!' - ஜோடோ யாத்திரை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம்

பா.சிதம்பரம் பேசுகையில், ``நடைப்பயணத்தைக் கேலி செய்பவர்களை, கொச்சைப்படுத்துபவர்களை மன்னிக்க வேண்டும் என மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜரை வேண்டுகிறேன். காந்தி தொடங்கிய நடைப்பயணத்தை `வெள்ளையனே வெளியேறு’ என்றோம். இந்தியில் `பாரத் ஜோடோ’ என்றோம். அந்த நேரத்தில் காந்தி, `செய்து முடி... அல்லது செத்துமடி' என்ற அருமையான வாசகத்தைத் தந்தார். `வெள்ளையர்களை வெளியேற்றும் வரை நம் முயற்சி நிற்காது' எனப் பெரும் அறைகூவலை விடுத்தார். இப்போது `பாரத் ஜோடோ’ என்று ராகுல் காந்தியைப் பார்த்துச் சொல்பவர்கள், `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
P.Chidambaram

அந்தப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினீர்கள். வெள்ளையன் மீண்டும் ஆட்சியில் தொடர வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள். `இன்று பாரதத்தை இணைப்போம்’ என்றபோது இதையும் கொச்சைப்படுத்துகிறீர்கள். அன்று வெள்ளையன் வெளியேறக் கூடாது என்றும், இன்று இணையக் கூடாது எனவும் நீங்கள் சொல்கிறீர்கள். சுதந்திரப் போராட்டத்தில் உங்களுக்குப் பங்கு கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திலும் உங்களுக்குப் பங்கு இல்லை. கொள்ளையனை வெளியேற்றும் வரை எங்கள் பயணம் நிற்காது. நாங்கள் சொல்வதைக் கேலி செய்தாலும், பாரதி சொல்வதை கேளுங்கள்.

`ஒளி படைத்த நெஞ்சினாய், உறுதிகொண்ட நெஞ்சினாய், இளைய பாரதத்தினாய் வா... வா... வா' எனப் பாடிய பாரதி இறுதியாக, `ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா... வா... வா' என்றார். ராகுல் காந்தியின் இந்தப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்" என்றார்.

Sep 07, 2022 06:02 PM IST

``இந்திய எல்லையில் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதைப் பிரகடனப்படுத்தவே ஜோடோ யாத்திரை!" - கே.எஸ்.அழகிரி

பாரத் ஜோடோ யாத்திரை தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ``தலைவர் ராகுல் காந்தி வரலாற்றுச் சிறப்புமிக்க நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் தேசத்தந்தை காந்தி தண்டி யாத்திரையை இப்படித்தான் தொடங்கினார். அப்போது அது சாதாரண விஷயமாகத் தெரிந்தது. மக்களின் உணர்வுகளை அரசுக்குத் தெரிவிக்கும்விதமாக அமைந்தது அந்த நடைப்பயணம். சர்வ வல்லமை மிகுந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தகர்ந்து விழுந்தது. புரட்சிகர சிந்தனை உடையவர் ராகுல். அவர் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் ஆகியிருக்க முடியும். அதை விட்டுக்கொடுப்பதில் அதைவிட மகிழ்ச்சி இருக்கிறது என்பதை உணர்த்தினார்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தேசத் தந்தை காந்தி, `இந்திய எல்லைக்குள் வாழ்கிற அனைவரும் இந்தியர்கள்' என்றார். இந்த நாட்டில் வாழ்கிறவர்களை இந்துக்கள், இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் மற்றும் மொழி நிறத்தின் பெயரில் பார்க்க மாட்டேன்' என்றார். ஆனால், அன்றைக்கே ஆர்.எஸ்.எஸ் சனாதனத்தைக் கையில் எடுத்தது. 5,000 ஆண்டுகளாக மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கிறோம். சனாதன தர்மத்தின் மூலம் பிரித்து பிளவை ஏற்படுத்தினார்கள். மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் பிரித்துவைத்தார்கள். நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்திய எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். கன்னியாகுமரியில் இந்த நடைப்பயணத்தைத் தொடங்குவது தமிழர்களுக்குப் பெருமை, தமிழ்நாடு காங்கிரஸுக்குப் பெருமை" என்றார்.

Sep 07, 2022 04:42 PM IST

பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார் ராகுல்!

LIVE: Bharat Jodo Yatra ``இந்திய மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை..!" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்க, அதை சல்யூட் அடித்து பெற்றுக்கொண்டார் ராகுல் காந்தி. தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் ராகுல் காந்தி.

Sep 07, 2022 04:22 PM IST

ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திப்பு

Sep 07, 2022 04:12 PM IST

LIVE: Bharat Jodo Yatra

Sep 07, 2022 03:42 PM IST

கன்னியாகுமரியில் ராகுல் காந்தி

இன்று காலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல், மதியம் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு அவர், கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தைப் பார்வையிட்டார்.

Sep 07, 2022 03:42 PM IST

பாரத் ஜோடோ யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை, இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து தொடங்குகிறார். அதை முன்னிட்டு, இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தன் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த யாத்திரை 150 நாள்களில் 3,500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நடைப்பயணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து தொடங்கிவைக்கிறார்.