UEFA Euro Cup Football: இங்கிலாந்து ஆண்கள் அணியால் செய்ய முடியாததைச் சாதித்த பெண்கள் அணி!

இங்கிலாந்துப் பெண்கள் அணியின் இச்சாதனை மகத்தானது. அவர்கள் கடந்து வந்த‌ பாதை அவ்வளவு எளிதானது அல்ல!

Published:Updated:
இங்கிலாந்து அணி | UEFA
இங்கிலாந்து அணி | UEFA ( Alessandra Tarantino | AP )
0Comments
Share
‘It's coming home…’ இங்கிலாந்துக் கால்பந்து ரசிகர்களின் 56 ஆண்டுக்கால ஏக்கத்தை மெய்ப்பித்திருக்கின்றது அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணி. அதுவும் 8 முறை ஐரோப்பிய சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தி வாகை சூடியிருக்கின்றனர்.

ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் டூன் முதல் கோலை அடித்தார். அடுத்த 20 நிமிடத்திற்குள் ஜெர்மனி தன் முதல் கோலை அடித்து சமநிலை ஆக்கியது. 90 நிமிட முடிவில் இரு அணிகளுமே சமநிலையில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. இறுதியாக 110-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கெல்லி கோல் அடிக்க, மொத்த வெம்ப்லி ஸ்டேடியமும் அதிர்ந்தது. முடிவில் இறுதிப்போட்டியில் ஒருமுறையும் தோற்றிடாத ஜெர்மனி அணிக்கு முதல் தோல்வியைப் பரிசளித்து, கோப்பையைத் தூக்கியது இங்கிலாந்து.

ஜெர்மனி அணி | UEFA
ஜெர்மனி அணி | UEFA
Rui Vieira

இங்கிலாந்துப் பெண்கள் அணியின் இச்சாதனை மகத்தானது. அவர்கள் கடந்து வந்த‌ பாதை அவ்வளவு எளிதானது அல்ல. 1966-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையில் இங்கிலாந்து ஆண்கள் அணி அடைந்த வெற்றி மகளிர் கால்பந்து குறித்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது. 1969-ம் ஆண்டில் மகளிர் கால்பந்து சங்கம் (WFA) நிறுவப்பட்டது. 1972-ம் ஆண்டு UEFA பரிந்துரையைத் தொடர்ந்து தேசிய சங்கங்கள் பெண்கள் விளையாட்டை இணைத்துக்கொள்ள, கால்பந்து சங்கம் (FA) அந்த ஆண்டின் பிற்பகுதியில் மகளிர் கால்பந்து லீக் போட்டிகளை மைதானங்களில் விளையாடுவதற்கான அனுமதியை அளித்தது.

இங்கிலாந்துப் பெண்கள் அணி தன் முதல் சர்வதேசப் போட்டியை ஸ்காட்லாந்திற்கு எதிராக 1972-ம் ஆண்டில் விளையாடியது. இங்கிலாந்துப் பெண்கள் அணி ஃபிஃபா உலகக் கோப்பைக்கு இதுவரை ஐந்து முறை தகுதி பெற்றுள்ளது. 1995, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் காலிறுதிச் சுற்று, 2015-ல் மூன்றாவது இடம், 2019-ல் 4வது இடம் எனச் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியது அந்த அணி.
UEFA
UEFA
Leila Coker

அதே போல் UEFA பெண்கள் சாம்பியன்ஷிப்பிலும் 1984, 2009 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிவரை சென்று கோப்பையை நழுவவிட்டது. 1984-ம் ஆண்டில் இறுதிப்போட்டி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் லெக்கை ஸ்வீடனும், இரண்டாவது லெக்கை இங்கிலாந்தும் வென்றதால், போட்டி extra -timeக்குச் செல்லாமல் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்வீடன் 4-3 என இங்கிலாந்தை வீழ்த்தியது.

UEFA கோப்பையுடன் இங்கிலாந்து அணி
UEFA கோப்பையுடன் இங்கிலாந்து அணி
Leila Coker

அதேபோல் 2009-ம் ஆண்டில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது இங்கிலாந்து அணி. அப்போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைப் பந்தாடியது ஜெர்மனி. வெம்ப்லி மைதானத்தில் இப்போட்டியைக் கண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை 87,192. மகளிர் கால்பந்தைக் காண இவ்வளவு கூட்டம் வந்தது இதுவே முதல் முறை.

பார்வையாளர்களின் எண்ணிக்கை 87,192
பார்வையாளர்களின் எண்ணிக்கை 87,192
Rui Vieira
இங்கிலாந்து ஆண்கள் அணியால் செய்ய முடியாததை இம்மகளிர் நிகழ்த்தியிருக்கின்றனர். ‘கடினமான பாதைகள் எப்போதும் மகிழ்ச்சியான இலக்கையே சென்றடையும்’ என்பதற்குச் சிறந்த உதாரணமாக இவ்வெற்றி அமைந்துள்ளது.

- கற்பக அய்யப்பன்

பயிற்சிப் பத்திரிகையாளர்