Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

4 Min Read

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ எந்த அணிக்கு சாதகமாக இருந்ததோ, ஆர்செனல் அணி முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக கேப்ரியல் ஜீசுஸின் வருகை அந்த அணியை வேறு ஒரு பரிணாமத்துக்கு மாற்றியிருக்கிறது.

Published:Updated:
பிரீமியர் லீக் - Premier League
பிரீமியர் லீக் - Premier League ( Marc Atkins )
0Comments
Share
பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது கேம் வீக் பல அதிர்ச்சிகரமான முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, நியூகாசிள் யுனைடட் அணியுடன் டிரா செய்தது. கடந்த வாரம் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய செல்சீ, இந்த வாரம் படுமோசமாக விளையாடி லீட்ஸ் யுனைடட் அணியிடம் தோல்வியடைந்தது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியோ வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணிக்கு எதிராக போராடி வெற்றி பெற வேண்டியதாக இருந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகள் தடுமாறிக்கொண்டிருந்த ஆர்செனல் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாகவும் இருக்கிறது!

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோ எந்த அணிக்கு சாதகமாக இருந்ததோ, ஆர்செனல் அணி முற்றிலும் மாறிவிட்டது. குறிப்பாக கேப்ரியல் ஜீசுஸின் வருகை அந்த அணியை வேறு ஒரு பரிணாமத்துக்கு மாற்றியிருக்கிறது. எர்லிங் ஹாலண்ட் வருகை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை விட, ஜீசுஸின் மாற்றம் தான் இந்த பிரீமியர் லீக் சீசனில் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் போட்டியிலும் அது தெரிந்தது. போர்ன்மௌத் அணியை 3-0 என வென்று 9/9 புள்ளிகள் பெற்றிருக்கிறது அந்த அணி.

முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிய தாக்கம் ஏற்படுத்தாமல் இருந்த அணியின் கேப்டன் மார்டின் ஓடகார்ட் இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்து அசத்தினார். ஐந்தாவது நிமிடத்தில் தன் கோல் கணக்கைத் தொடங்கிய அவர், ஆறு நிமிடங்களில் இரண்டாவது கோலையும் அடித்தார். வில்லியம் சலிபா 54வது நிமிடத்தில் ஒரு அட்டகாசமான கோல் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். இடது விங்கில் இருந்து கிரானித் ஜகா கொடுத்த பாஸை, பாக்சுக்கு வெளியே இருந்து அட்டகாசமாக கோலாக்கினார் சலிபா. விளையாடிய மூன்று போட்டிகளில் 9 கோல்கள் அடித்து அசத்தியிருக்கும் ஆர்செனல், 2 கிளீன் ஷீட்களையும் பதிவு செய்திருக்கிறது.

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டிகள் பெரும் அதிர்ச்சிகளை அடுத்தடுத்து கொடுத்துக்கொண்டே இருந்தன. எல்லண்ட் ரோடில் நடந்த போட்டியில் செல்சீயை 3-0 என வீழ்த்தி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தது லீட்ஸ் யுனைடட். அந்த அணியின் முதல் கோல் செல்சீ கோல் கீப்பர் எடுவார்ட் மெண்டி பரிசளித்ததால் வந்தது. வழக்கம்போல் செல்சீ பின்னால் இருந்து பாஸ் செய்ய, தனக்கு வந்த ஒரு பாஸை உடனே சக வீரருக்கு அனுப்பாமல் மெண்டி தாமதித்தார். அந்த நேரத்தில் பிரெண்டன் ஆரோன்சன் மெண்டியை பிரஸ் செய்ய, பந்தை இழந்தார் செல்சீ கோல் கீப்பர். விளைவாக லீட்ஸ் யுனைடட் முன்னிலை பெற்றது.

இதில் இருந்து மீள்வதற்குள்ளாகவே இரண்டாவது கோலையும் வாங்கியது செல்சீ. ஜேக் ஹாரிசன் அனுப்பிய ஃப்ரீ கிக்கை சரியாக மார்க் செய்யப்படாமல் இருந்த ராட்ரிகோ ஹெட்டர் மூலம் கோலாக்கினார். என்னென்னமோ செய்து பார்த்தும் செல்சீயால் கோலடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் பல மாற்றங்கள் செய்து பார்த்தது அந்த அணி, இருந்தும் எதுவும் பலன் தரவில்லை. மாறாக லீட்ஸ் யுனைடட் தான் மூன்றாவது கோலை அடித்தது. டேனியல் ஜேம்ஸ் கொடுத்த கிராஸை ராட்ரிகோ கட்டுக்குள் கொண்டுவரத் தவறினார். இருந்தாலும் அது ஹாரிசினடம் சிக்க, அதை அவர் கோலாக்கி அந்த அணிக்கு 3 கோல் முன்னிலை கொடுத்தார் அவர். செல்சீ அணிக்கு இருக்கும் பிரச்னைகள் போதாது என்று கலீடு கூலிபாலி ரெட் கார்ட் வாங்கி வெளியேறினார். 3 போட்டிகளின் முடிவில் அந்த அணி 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறது.

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

லீட்ஸ் யுனைடட் போல் இன்னொரு அதிர்ச்சியை கொடுக்க தயாரானது நியூகாசிள் யுனைடட். செயின்ட் ஜேம்ஸ் பார்க்கில் நடந்த இந்தப் போட்டி கடைசி வரை மிகவும் பரபரப்பாகச் சென்றது. ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே கோலடித்து கார்டியோலாவின் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் இல்கே குண்டோகன். ஆனால் நியூகாசிள் யுனைடட் வீரர் மிகேல் ஆல்மிரான் 28வது நிமிடத்தில் கோலடித்து சமநிலை ஏற்படுத்தினார். சிட்டி பதிலடி கொடுக்க நினைக்க, நியூகாசிள் கவுன்ட்டர் அட்டாக்கில் அச்சுறுத்தியது. விளைவாக 39வது நிமிடத்தில் இரண்டாவது கோலும் வந்தது. இதை அந்த அணியின் ஸ்டிரைக்கர் கேலம் வில்சன் அடித்தார். முதல் பாதி 2-1 என முடிந்தது.

54-வது நிமிடத்தில் நியூகாசிள் யுனைடட் அணிக்கு பாக்ஸுக்கு வெளியே ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. அதை சிறப்பாக கோலாக்கினார் கீரன் டிரிப்பியர். ஆட்டம் சிட்டியின் கையை விட்டுப் போய்விட்டது என்று நினைக்கும்போது அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து கம்பேக் கொடுத்தது சிட்டி. ராட்ரி கொடுத்த பாஸை 60வது நிமிடத்தில் கோலடித்து இடைவெளியைக் குறைத்தார் எர்லிங் ஹாலண்ட். அடுத்த 4 நிமிடங்களில் கெவின் டு புருய்னா கொடுத்த அதி அற்புதமான பாஸை கோலாக்கினார் பெர்னார்டோ சில்வா. இதன் மூலம் ஆட்டம் 3-3 என சமநிலைக்குத் திரும்பியது. இந்தப் போட்டி டிரா ஆகியிருந்தாலும் 7 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது மான்செஸ்டர் சிட்டி.

Premier League Week 2:செல்சீ தோல்வி,மான்சிட்டி டிரா, ஆர்செனல் முதலிடம்,இது புது பிரீமியர் லீக் பாஸ்!

பிரீமியர் லீக் முடிவுகள்: கேம்வீக் 3

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 1 - 0 வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்

கிறிஸ்டல் பேலஸ் 3 - 1 ஆஸ்டன் விலா

எவர்டன் 1- 1 நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

ஃபுல்ஹாம் 3 - 2 பிரெண்ட்ஃபோர்ட்

லெஸ்டர் சிட்டி 1 - 2 சௌதாம்ப்டன்

போர்ன்மௌத் 0 - 3 ஆர்செனல்

லீட்ஸ் யுனைடட் 3 - 0 செல்சீ

வெஸ்ட் ஹாம் யுனைடட் 0 - 2 பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்

நியூகாசிள் யுனைடட் 3 - 3 மான்செஸ்டர் சிட்டி

இந்த வாரம் நடந்த போட்டிகளில் பெரிய அளவு ரசிகர்களின் கவனத்தை ஈற்றது ஒரு புண்டஸ்லிகா ஆட்டம் தான். சனிக்கிழமை இரவு சிக்னல் இடுனா பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் வெர்டர் பிரெமன் அணியை சந்தித்தது பொருஷியா டார்ட்மண்ட். ஜூலியன் பிராண்ட் (45+2வது நிமிடம்), ரஃபேல் குரேரோ (77வது நிமிடம்) ஆகியோர் அடித்த கோல்களால் 2-0 என முன்னிலை பெற்றது அந்த அணி. 88வது நிமிடம் வரை அந்த 2 கோல் முன்னிலை அந்த அணி வென்று விடும் என்று தான் உணர்த்தியது.

ஆனால், அடுத்த 6 நிமிடங்களில் எல்லாமே மாறியது. 6 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து போட்டியை வென்றது வெர்டர் பிரெமன். 89வது நிமிடத்தில் லீ புசனன், 90+3வது நிமிடத்தில் நிகலஸ் ஷ்மிட், 90+5வது நிமிடத்தில் ஆலிவர் பூர்க் ஆகியோர் கோலடித்து அந்த அணியை வெற்றி பெற வைத்தனர். இவர்கள் மூவருமே மாற்று வீரர்களாகக் களமிறங்கியவர்கள். கையில் இருந்த போட்டியை கடைசி தருணத்தில் இழந்திருக்கிறது டார்மண்ட். அதுவும் பேயர்ன் மூனிச் 3 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து மிரட்டல் ஃபார்மில் இருக்கும்போது, டைட்டில் ரேஸிலும் பெரிய அளவு சறுக்கியிருக்கிறது அந்த அணி.