சினிமா
தொடர்கள்

“கமல்-விஜய்-அஜித் இணைந்து ஆட்சி அமைக்கணும்!”

நாங்கள் எதையும் மறக்கவில்லை. ஊர் மக்களுக்காக, இலவச ஆங்கிலப் பள்ளிக்கூடம் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

Published:Updated:
கங்கை அமரன்
பிரீமியம் ஸ்டோரி
கங்கை அமரன்
Comments
Share

எப்போதுமே கலகலப்பான பேச்சால் தான் இருக்கும் இடத்தையே மகிழ்ச்சிமயம் ஆக்கிவிடுபவர் கங்கை அமரன். ஆனால் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய அணிந்துரை குறித்து ஒரு யூடியூப் சேனலில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, அவர் ஆத்திரத்தின் உச்சியில் வசைபாடியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த ஆத்திரமெல்லாம் வடிந்து, பழைய கலகல கங்கை அமரனாகவே அவர் பதில் அளித்த நேர்காணல் இது.

“அந்தப் பேட்டிக்கு முன்பாக அவர்கள் சொன்னது ஒன்று, செய்தது வேறாக இருந்ததால் அப்படி நடந்துவிட்டது. அந்தமாதிரியெல்லாம் நடந்துக்கக் கூடாதுன்னுதான் இப்போ பொறுமையா உட்கார்ந்திருக்கேன். ‘ஏன் எல்லார்கிட்டயும் கத்திட்டிருக்க. உன்னையே நீ அடக்கிக்க மாட்டியா’ன்னு இளையராஜா அண்ணன் திட்டினார். ‘நான் இப்படித்தாண்ணே. இனிமே அடக்கிக்க ட்ரை பண்ணுறேன்’னு சொன்னேன். இப்போல்லாம், அமைதியாதான் இருக்கேன்” என்கிறார்.

``பண்ணைபுரத்தின் எளிய பின்னணியில் இருந்து வந்து உயரங்களைத் தொட்ட குடும்பம் உங்களுடையது. ஆனால், கடந்துவந்த பாதையை மறந்துவிட்டீர்கள் என்று உங்கள் அண்ணன்மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படுகிறதே?’’

“நாங்கள் எதையும் மறக்கவில்லை. ஊர் மக்களுக்காக, இலவச ஆங்கிலப் பள்ளிக்கூடம் கட்டிக்கொண்டிருக்கிறோம். வருடம்தோறும் அம்மாவின் நினைவு நாளுக்கும் தீபாவளிக்கும் ஊருக்குச் சென்று மக்களோடு இருப்பது வழக்கம். அப்போல்லாம் ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுவதோடு இல்லாதவர்களுக்குத் துணிகளும் எடுத்துக்கொடுக்கிறோம். திருவிழா வந்தால் உதவி செய்வோம். ஊரார் சந்தோஷமாக இருக்க நல்ல பாடல்களைப் போட்டுக் கொடுத்திருக்கோம். இதைத் தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்? நாங்கள் பெரிய அளவுக்குப் பணம் வைத்திருக்கக்கூடிய ஆட்கள் இல்லை. நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 20-ல் 1 பங்குதான் அண்ணன் சம்பாதிக்கிறார்.”

``விஜய் - அஜித் இணையும் பேன் இந்தியா படத்தை வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என்று சொல்லியிருக்கிறீர்களே?’’

“உண்மைதான். அதுக்கான முயற்சி நடந்துட்டிருக்கு. ‘மங்காத்தா’ பார்த்துட்டு ‘ஏம்ப்பா, இந்த மாதிரி ஒரு கேரக்டரை நான் பண்ணியிருப்பேனே?’ என்றார் விஜய். அதனால்தான், விஜய் - அஜித் ரெண்டுபேரும் நடிக்கிற மாதிரி அட்டகாசமான கதையை எழுதிட்டிருக்கான் பிரபு. அந்தக் கதை ரெண்டு பேருக்கும் பிடிச்சு ஓகே ஆன அடுத்த நிமிடமே அறிவிப்பு பிரமாண்டமா வரும், விஜய்யும் அஜித்தும் வெளியில்தான் பிரிந்திருக்கிறார்கள். உண்மையில், ரொம்ப ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு ஃபேமிலியும் யாருக்கும் தெரியாமல் துபாயில் சந்திப்பார்கள். எங்க குடும்பத்தோடு துபாய் போயிருந்தப்போ பார்த்திருக்கேன். நாங்கள் இந்திரா நகரில் இருக்கும்போது, முகத்தை நல்லா கவர் பண்ணிட்டு பைக்கிலேயே அஜித் வீட்டுக்கு வந்து ‘அம்மா, எனக்கு நல்ல காபி கொடுங்க’ என்பார். நல்ல மனசுள்ள பிள்ளை அஜித்.”

``விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் குதித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“மக்களுக்கு நல்லது பண்ணணும்னு வர்றாங்க. நல்லபடியா எல்லோரும் வரட்டும். ஆனால், கமல், விஜய், அஜித் மூவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் சந்தோஷம். கமல் முதல்வர், அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் நிதியமைச்சர் பதவி கொடுக்கலாம். அரசு பணம் கொடுக்கலைன்னாலும் இவங்க சொந்தக் காசுல நல்லது பண்ணுவாங்க. இவர்களுடன் சூர்யாவையும் சேர்த்துக்கலாம். ஆனால், எனக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி கொடுத்துவிட வேண்டும்.”