``நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் இந்தியர்களும் ஒப்புக்கொண்டனர்..!" - சுப்பிரமணியன் சுவாமி

``லடாக்கின் சில பகுதிகளை சீனா கைப்பற்றிய நிலையில், மோடியும் `கோய் ஆயா நஹின்' என்று திகைப்பில் இருக்கிறார்." - சுப்பிரமணியன் சுவாமி

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி
0Comments
Share

அமெரிக்க ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தால் அதிருப்திக்குள்ளான சீனா, அமெரிக்காவுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருகிறது. மேலும் சீன ராணுவம், தைவானில் துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

இந்த நிலையில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சீனா, திபெத், தைவான் ஆகியவற்றைக் குறிப்பிட்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான நேரு, வாஜ்பாயை விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ``நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத், தைவானை சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியர்களாகிய நாமும் ஒப்புக்கொண்டோம். ஆனால், இன்று பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளப்பட்ட லடாக் எல்லைப் பகுதிகளை சீனா மதிப்பதில்லை.

மோடி
மோடி

மேலும், லடாக்கின் சில பகுதிகளைச் சீனா கைப்பற்றிய நிலையில், மோடியும் `கோய் ஆயா நஹின்' என்று திகைப்பில் இருக்கிறார். நாம் முடிவு செய்ய தேர்தல்கள் இருக்கின்றன என்பதை சீனா அறிந்திருக்க வேண்டும்" என ட்வீட் செய்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே மோடியை அவ்வப்போது விமர்சித்துவந்த சுப்பிரமணியன் சுவாமி, தற்போது நேரு, வாஜ்பாயை விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.