முடிவுக்கு வந்த பனிப்போர் - ட்விட்டரின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புதல்!

எலான் மஸ்க், ட்விட்டரின் பங்குகளை வாங்கும் ஒப்பந்தத்தைத் தொடர முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Published:Updated:
எலான் மஸ்க், ட்விட்டர்
எலான் மஸ்க், ட்விட்டர்
0Comments
Share

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களை நடத்திவரும் எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்திருந்தார். சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரின் முழுப் பங்கையும் எலான் மஸ்க் வாங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ட்விட்டரில் போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான விவரங்களை அந்த நிறுவனம் தனக்கு அளிக்கவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். மஸ்க் ட்விட்டரை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எலான்  மஸ்க்
எலான் மஸ்க்

டெக் உலகில் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தமாகப் பார்க்கப்பட்ட, பேசப்பட்ட இதை, கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எலான் மஸ்க் இந்த முடிவை எடுத்த நிலையில் ட்விட்டரின் தலைவர் பிரெட் டெய்லர் மஸ்கிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டரின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொள்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ட்விட்டரின் பெரும்பான்மைப் பங்குகள் எலான் மஸ்க் வசம் செல்லவுள்ளது.