``11 குற்றவாளிகள் விடுதலை அரசாங்கத்தின் முடிவு; நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம்!" - நீதிபதி

``இதில் குற்றவாளிகளை விடுவித்ததென்பது அரசாங்கத்தின் முடிவு, அதற்காக மக்கள் யாரும் நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம்." - நீதிபதி மிருதுளா பட்கர்

Published:Updated:
நீதித்துறை
நீதித்துறை
0Comments
Share

2002-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 11 குற்றவாளிகளை, சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. அரசின் இந்த முடிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், விடுதலையான 11 பேரை ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பில்கிஸ் பானோ - Bilkis Bano
பில்கிஸ் பானோ - Bilkis Bano

இந்த விவகாரத்தில் மோடியை, ராகுல் காந்தி சாடியிருந்த நிலையில், ``குற்றவாளிகள் 11 பேரும் பிராமணர்கள், அவர்கள் நல்லவர்கள். தண்டனையின்போது சிறையில் அவர்களின் நன்னடத்தை காரணமாகவே விடுதலை செய்யப்பட்டனர்" என பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கூறியது எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்குள்ளானது. இந்த நிலையில் இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியில், குற்றவாளிகளுக்குத் தண்டனையை உறுதிசெய்த நீதிபதி மிருதுளா பட்கர் தற்போது இதில் வாய் திறந்திருக்கிறார்.

நீதிபதி மிருதுளா பட்கர்
நீதிபதி மிருதுளா பட்கர்
twitter

தனியார் ஊடகத்திடம் பேசிய நீதிபதி மிருதுளா பட்கர், ``மக்களுக்கு நீதி வழங்குவதற்காக உச்ச நீதிமன்றம் உழைத்திருக்கிறது. அப்படியிருக்கையில், மக்கள் ஏன் நீதித்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மேலும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நீதித்துறை தன்னால் இயன்ற அனைத்தையும் முயன்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், எங்களை விமர்சிக்கும்போது நாங்கள் மிகவும் மோசமாக உணர்கிறோம். இதில் குற்றவாளிகளை விடுவித்ததென்பது அரசாங்கத்தின் முடிவு, அதற்காக மக்கள் யாரும் நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம்" என்று கூறினார்.