திருச்செந்தூர்: சிறப்பு யாகம்... பக்தர்களுக்கு மறுப்பு; சபரீசனுக்கு மட்டும் அனுமதியா?- பாஜக கேள்வி

காலை 8:15 மணிக்குத் தொடங்கிய சிறப்பு யாகத்தில் சபரீசனுடன் அவர் நண்பர் வெங்கட்டும் கலந்துகொண்டார். யாகம் முடிவடைந்த பின்னர் இருவரும் சுவாமி தரிசனத்துக்காகச் சென்றனர்.

Published:Updated:
திருச்செந்தூர் - சபரீசன் - பாஜக
திருச்செந்தூர் - சபரீசன் - பாஜக
0Comments
Share

நேற்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தன் நண்பரான தொழிலதிபர் வெங்கட்டுடன் வந்தார். மூலவர், உற்சவர் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலின் வெளிப் பிரகாரத்திலுள்ள சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதியில் 10 நிமிடங்கள் கண்களை மூடி பிரார்த்தனை செய்தார். கோயில் வளாகத்தில் வள்ளிக்குகைக்குச் செல்லும் நடைபாதையில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டு, வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

சபரீசன்
சபரீசன்

அந்தப் பந்தலில் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்கான சிறப்பு யாகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சபரீசனின் வருகையையொட்டி காலை 6 மணி முதல் வள்ளிக்குகைக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காலை 8:15 மணிக்குத் தொடங்கிய சிறப்பு யாகத்தில் சபரீசனுடன் அவர் நண்பர் வெங்கட்டும் கலந்துகொண்டார். யாகம் முடிவடைந்த பின்னர் இருவரும் சுவாமி தரிசனத்துக்காகச் சென்றனர்.

வள்ளிக்குகை செல்லும் நுழைவு வாயிலில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு அறநிலையத்துறைப் பணியாளர்கள், தனியார் செக்ரியூட்டிகள், போலீஸார் பாதுகாப்புப் பணியில் நின்றிருந்தனர். இதற்கிடையே வள்ளிக்குகைக்கு தரிசனத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களை அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து காலை 9 மணி முதல் வள்ளிக்குகைக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரீசன்
சபரீசன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகம் நடத்துவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடைவிதித்திருக்கும் கோயில் நிர்வாகம், முதல்வரின் மருமகனுக்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தது என பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

பாஜக புகார் மனு
பாஜக புகார் மனு

இது தொடர்பாக பா.ஜ.க-வின் ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஓம்பிரபு, அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக்கிடம் புகார் மனு அளித்திருக்கிறார்.