தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ், விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு... நீதிமன்றத்தை நாடிய ஆர்எஸ்எஸ்!

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

Published:Updated:
 ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
0Comments
Share

`அக்டோபர் 2 -ம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் நடத்த எந்த அமைப்புக்கும் அனுமதியில்லை’ என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனிதக்ஷ்சங்கிலிப் பேரணி நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றமும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனிதச்சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையில், தமிழக காவல்துறையும் சீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது.