சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு BF.7, BA.5.1.7 - மீண்டும் ஆபத்து? WHO சொல்வதென்ன?

முதன்முறையாக சீனாவின் வடமேற்குப் பகுதியில், ஒமிக்ரானின் உருமாறிய திரிபு கண்டறியப்பட்டது என உள்ளூர் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துறை இயக்குநர் லி ஷுஜியன் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஒமிக்ரான்
ஒமிக்ரான் ( pixa bay )
0Comments
Share

கோவிட் தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது என்று மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது சீனாவில் ஒமிக்ரானின் உருமாறிய புதிய திரிபு (sub variant) BF.7 மற்றும் BA.5.1.7 அதிவேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முதன்முறையாக சீனாவின் வடமேற்குப் பகுதியில், இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டது என உள்ளூர் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துறை இயக்குநர் லி ஷுஜியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

இந்தப் புதிய தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது. அதாவது, ``BF.7 என்ற ஒமிக்ரானின் புதிய திரிபு வேகமாகப் பரவி வரும் தொற்றாகக் கருதப்படு வதால், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கத் தவறும் பட்சத்தில், சீனாவில் இந்த நோய்த்தொற்று ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது’’ என்று அறிவித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாடுகள், பரிசோதனைகள், ஊரடங்குகள் போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் சீனா, கோவிட் தொற்று எண்ணிக்கையை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வரத் தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. இருந்த போதிலும், சீனாவில் அக்டோபர் 9-ம் தேதி சுமார் 1,939 கோவிட் தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளது.