ஹிஜாப்: ``பள்ளிக்குள் மதப்பழக்கவழக்கங்களை பின்பற்ற நீங்கள் உரிமைகொள்ள முடியுமா?" - உச்ச நீதிமன்றம்

``நீங்கள் எதைப்பின்பற்ற விரும்புகிறீர்களோ அதைச் செய்ய உங்களுக்கு மத உரிமை இருக்கலாம். ஆனால் அந்த உரிமையைப் பள்ளிக்குள் கொண்டு செல்ல முடியுமா?" - உச்ச நீதிமன்ற அமர்வு

Published:Updated:
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
0Comments
Share

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு எதிராக, இந்து மாணவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போர்க்கொடி தூக்க... அரங்கேறிய போராட்டங்களும், கலவரங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டம் 25-வது பிரிவை மேற்கோள்காட்டி, `ஹிஜாப் அணிவதென்பது மதப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையின் பகுதியல்ல!' எனக் கூறி ஹிஜாப் அணியத் தடைவிதித்தது.

ஹிஜாப்
ஹிஜாப்

அதைத் தொடர்ந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கெதிராக, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த நிலையில், அந்த மனுக்கள்மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஹேமந்த் குப்தா சுதன்ஷு அடங்கியோர் அமர்வுக்கு நேற்று வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிமன்ற அமர்வு, ``சீருடை பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கு மாணவர் ஹிஜாப் அணியலாமா?" என்று கேள்வியெழுப்பியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் தொடர்ந்து பேசிய நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு, ``நீங்கள் எதைப் பின்பற்ற விரும்புகிறீர்களோ அதைச் செய்ய உங்களுக்கு மத உரிமை இருக்கலாம். ஆனால் அந்த உரிமையைப் பள்ளிக்குள் கொண்டு செல்ல முடியுமா? இந்தப் பிரச்னையை வேறுவிதமாக மாற்றியமைக்க முடியும். இது அவசியமானதாகவும் இருக்கலாம், அவசியமில்லாததாகவும் இருக்கலாம். நாங்கள் சொல்வது என்னவென்றால், ஒரு அரசு நிறுவனத்தில் உங்களின் மதப் பழக்கவழக்கங்களை நீங்கள் வலியுறுத்த முடியுமா என்பதுதான். ஏனெனில் நம்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாகும்" என்று தெரிவித்தனர்.