``உணவுப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டி... ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தார்கள்?" - அரவிந்த் கெஜ்ரிவால்

"டெல்லியில் மருத்துவச் சிகிச்சை, தண்ணீர், மின்சாரம் இலவசமாக வழங்கினோம். ஊழலை ஒழித்ததால் இதையெல்லாம் செய்ய முடிகிறது." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
0Comments
Share

`25 கிலோவுக்குக் குறைவான அளவுகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை, தயிர், வெண்ணெய்க்கு 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்’ என்கிற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், ``உயர்த்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப் பெற வேண்டும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தயிர், கோதுமை, அரிசி மற்றும் பிற உணவுப்பொருள்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி விதித்திருக்கிறது. ஆங்கிலேயர்களும் இதைத்தானே செய்தார்கள்... பணவீக்கத்தால் மக்கள் கலக்கமடைந்திருக்கின்றனர். டெல்லியில், மக்கள் பணவீக்கத்திலிருந்து மீள சிறிது உதவியிருக்கிறோம்.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

டெல்லியில் மருத்துவச் சிகிச்சை, தண்ணீர், மின்சாரம் இலவசமாக வழங்கினோம். ஊழலை ஒழித்ததால் இதையெல்லாம் செய்ய முடிகிறது. எந்த வரியையும் உயர்த்தவில்லை. உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி-யைத் திரும்பப் பெற மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஆம் ஆத்மி ஆட்சியை இங்கு உருவாக்குங்கள்.

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்
ANI

இமாச்சலப் பிரதேசத்தில் நாங்கள் உங்களுக்குப் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் தருவோம். ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் பரவிவருகிறது, அதனால் பல பிரச்னைகள் வரும். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இமாச்சலப் பிரதேசத்தில் நேர்மையான ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.