Bharat Jodo Yatra: ராகுல் காந்தி நடை பயணம்; முக்கிய தலைவர்கள தங்கும் 60 கேரவன்களில் என்ன ஸ்பெஷல்?

ராகுல் காந்தியின் கேரவனில் படுக்கை அறை, அலுவலகம், நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் பகுதி என வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
ராகுல் காந்தி நடைபயணத்துக்காக கன்னியாகுமரியில் கேரவன்கள்
ராகுல் காந்தி நடைபயணத்துக்காக கன்னியாகுமரியில் கேரவன்கள்
0Comments
Share
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோயாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நாளை தொடங்குகிறார். நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தைத் தொடங்குகிறார். 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். நாளை இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார். பின்னர் 8-ம் தேதி காலை நடைபயணத்தைத் தொடர்கிறார் ராகுல் காந்தி. 8-ம் தேதி இரவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்குகிறார். 9-ம் தேதி கன்னியாகுமரி - கேரள எல்லை வரை நடைபயணம் மேற்கொண்டு இரவு செறுவாரக்கோணம் பகுதியில் தங்குகிறார். 10-ம் தேதி காலை அவர் கேரளா மாநிலத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார்.

ராகுல் காந்தி நடைபயணத்துக்காக கன்னியாகுமரி வந்துள்ள கேரவன்கள்
ராகுல் காந்தி நடைபயணத்துக்காக கன்னியாகுமரி வந்துள்ள கேரவன்கள்

ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட குளுகுளு ஏ.சி வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது. இந்த 60 கேரவன்களும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி தங்குவதற்காக சிறப்பு வசதிகளுடன் அதி நவீன கேரவன் இன்று கன்னியாகுமரிக்கு வருகிறது.

இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்கும் வதற்கு சுமார் 30 கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள கேரவன்களில் சமையல் செய்பவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம்கட்ட தலைவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள கேரவன்கள் 4 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேரவன்களிலும் நான்கு தலைவர்கள் தங்குவாரர்கள் என கூறப்படுகிறது. அதே சமயம் ராகுல் காந்தி தங்கும் கேரவனின் இரண்டு சொகுசு பெட்கள் மட்டுமே உள்ளன.

கேரவன்கள்
கேரவன்கள்

ஒரு வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அது அத்தனையும் ராகுல் காந்தியின் கேரவனில் இருப்பதாக நிர்வகிகள் தெரிவித்தனர். படுக்கை அறை, அலுவலகம், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் பகுதி என வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி யத்திரை தொடங்குவதை ஒட்டி அகில இந்திய அளவிலான முக்கிய நிர்வாகிகள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனர்.