“கலைஞர் எனக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுத்தார்..” - துரைமுருகன் #AppExclusive

தன்கிட்ட ஜோசியம் சொல்ல வர்றவங்க கிட்ட கலைஞரின் ஜாதகத்தை கொடுப்பாராம்! :-D

Published:Updated:
An Exclusive Interview Duraimurugan
An Exclusive Interview Duraimurugan
0Comments
Share

" 'ஜோசியம், ஜாதகத்துல நம்பிக்கை உண்டா?” 

“‘வருவது வரும். வருந்தி என்ன பயன்?’ங்கிற மாதிரி காரெக்டர் நான். என்கிட்டே சிலபேர் ‘ஜோஸியம் சொல்றேன் சார்'ம்பாங்க... 'எனக்குப் பார்த்து என்ன ஆகப் போகுது. இதோ தலைவர் ஜாதகம் இருக்கு. அவருக்குப் பாரு.... அவர் தலையெழுத்து நல்லா இருந்தா எங்க எல்லா தலையெழுத்தும் நல்லாத்தான் இருக்கும் ‘பேன்.”

 “உங்க பாத்ரூம் பாடல் எது?”

“தததின்னா... தன்னன்னான்னா... தான். என்ன பாக்குறீங்க..? பாத்ரூம்ல மட்டுமில்லே! கொஞ்சம் குஷி மூடு வந்தா இப்படி ராகம் போட்டு கச்சேரியை ஆரம்பிச்சுடுவேன் நான். வார்த்தைகளை வதம் பண்ணி இசையோடு ஆவர்த்தனம் அதி கமா இருக்கக்கூடிய இப்போ தைய சினிமா பாடல்கள் எனக்குப் பிடிக்கிறதில்லை. கர்னாடக சங்கீதம் மேலதான் எனக்கு ஈடுபாடு ராகம், தாளம் சங்கதிகளெல்லாம் எனக்கு கரெக்டா தெரியாது. இருந்தாலும் அந்த இனிமை இழுக்குமே."

An Exclusive Interview Duraimurugan
An Exclusive Interview Duraimurugan

"பிடிச்ச டுரிஸ்ட் ஸ்பாட்?"

“முதுமலை, டாப் ஸ்லிப் மாதிரியான ஃபாரஸ்ட் ஏரியாக்கள்தான் என்னோட சாய்ஸ். கண்ணுக்கெட்டின தூரம் வரை பசுமை மரங்களின் தலையாட்டலில் வேகம் பிடிச்சுக் கிளம்பற பலமான காத்து, அது புகுந்து புறப்படற போது பறவைகள் நடத்துற இசைக்கச்சேரி... சுத்தமான காத்தை சுவாசிச்சுக் கிட்டே அனுபவிக்கிற அந்த, ரம்யமான சூழ்நிலை எனக்கு ரொம்புப் பிடிக்கும்."

"பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஜோரா இருக்குமா?"

"கேக்குறதால ஒரு விஷயம் சொல்றேன். என்னோட பிறந்த நாள் எதுன்னே எனக்குத் தெரியாது. ஆமா. அதுதான் உண்மை! நான் பிறந்தது குடியாத்தம் பக்கத்துல உள்ள மேல்மாயல்ங்கிற ஊர் என் பெற்றோர் எனக்குன்னு ஜாதகம் ஏதும் எழுதவுமில்லே ஊருக்குள்ளே பர்த் சர்டிபிகேட்’னு ஒண்ணையும் தரலை. இதுபோக, பிறந்த நாள் கொண்டாடுற அளவு நான் பெரிய மனுஷனும் கிடையாது. என் ஒரே மகன் கதிர் ஆனந்த் பிறந்தது 19 ஜனவரி 75-ல. அதை மட்டும் வீட்டுல ஸ்பெஷல் பிரியாணியோட கொண்டாடுவோம்."

“விட்டுடனும்னு நெனைச்சாலும் தொடர்ற கெட்ட பழக்கம் ஏதாவது..."

"அது கெட்ட பழக்கம்தானான்னு தெரியலை என்னன்னா போன்ல யார்கூடவாவது பேசும் போது, கையில உள்ள பேனாவால கைக்கு முன்னாடி இருக்கிறது ஃபைலாகவே இருந்தாலும் என்னையுமறியாம பொம்மை போட்டுடறேன். இஸ்ன்னா எதுனா கிறுக்கி வெச்சுடறேன்."

"குடும்ப விஷயமெல்லாம் டீல் பண்றது யார்”

"தனிப்பட்ட துரைமுருகன் தி.மு.க-வுக்குச் சொந்தம். எம்.எல்.ஏ. துரைமுருகன் தொகுதி மக்களுக்குச் சொந்தம். இப்படி இருக்கிற நிலைமையில வீட்டு வேலைகளை எப்படி இழுத் துப் போட்டுக்கிட்டு செய்யறது: குடும்ப பட் ஜெட்டைக்கூட என் மனைவிதான் கவனிப்பாங்க"

“என்ன விளையாட்டு பிடிக்கும்?”

“விளையாட்டு பத்தி எனக்கு அதிகம் தெரியாது. ஆளாளுக்கு கிரிக்கெட்ல ஆர்வமா இருந்தாலும் அவங்க பரபரப்பு எனக்கு விநோதமா இருக்கும். சென்னையில இந்தியா, பாகிஸ்தான் மேட்ச் நடந்தப்ப தலைவர் என்னையும் கூட அழைச்சுக்கிட்டுப் போய், ஒவ்வொரு விஷயமா சொல்லிக் கொடுத்தார்.”

An Exclusive Interview Duraimurugan
An Exclusive Interview Duraimurugan

“மேக்கப், செண்ட் மாதிரி மேட்டர்கள் உண்டா?”

"முன்னே அலமாரி முழுக்க டிஸைன் டிஸைனான செண்ட் பாட்டிலா அடுக்கி வெச்சு, விதவிதமான வாசத்துல கலக்குவேன். 25 வருஷப் பழக்கத்துல திடீர்னு ஏதோ மாற்றம். 88-ம் வருஷம்னு நினைக்கிறேன். திடீர்னு செண்ட் வாசத்துல ஒரு அலர்ஜி ஏற்பட்டுச்சு! யாராவது செண்ட்டோட என் எதிர்ல வந்து நின்னா, மூச்சடைக்குது. ஏன்னு காரணம் புரியலை.”

“என்ன புத்தகங்கள் படிப்பீங்க..?”

"கலை, இலக்கியம், வரலாறு சம்பந்தமான புத்தகங்கள் படிப்பேன். தொடர்கதைகளும், கற்பனைக் கதைகளும் படிக்கிறதில்லை. சரித்திரக் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். என் கார்ல எப்பவும் ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர் போன்ற கலைஞர் எழுதின. புத்தகங்களும் கல்கியோட நூல்களும் இருக்கும். ஒருமுறை நான் ஃபாரின் போய்ட்டு வந்தப்ப, ரெண்டு பெரிய பெட்டி நிறைய புத்தகங்களாத் தூக்கிட்டு வந்ததைப் பார்த்து கஸ்டம்ஸ்லயே மிரண்டுட்டாங்க..”

"அப்செட் ஆகிற சமயத்துல என்ன செய்வீங்க..?”

“எமோஷனலாகிக் கத்திடு வேன். அப்புறம்... அவ்வளவு உணர்ச்சிவசப் பட்டிருக்கக் கூடாதோனு தோணும். என்ன பெரிசாப் பேசிட்டான்னு இத் தனை சத்தம் போட்டோம்னு வெட்கமாயிடும். 'போறான் போ!'னு அவன் கேட்ட வேலையை செஞ்சு கொடுத்திரு வேன். நான் கத்தினா காரியம் ஆய்டும்’னு என் கூட இருக்கிறவங்களுக்கு நல்லாத் தெரியும்.”

"உங்க எனர்ஜி சீக்ரெட் என்ன?”

"நான் ரொம்ப யதார்த்தவாதி. எதையும் ரொம்ப லைட்'டா எடுத்துப்பேன். ஆனந்தக் கூத்தாட லும் கிடையாது. அழுது புலம்பற ஆளும் கிடையாது. பரீட்சை எழுதறோம். நம்ம நம்பர் இருந்தாலும் ஒகே, இல்லாட்டாலும் ஒகே நோ டென்ஷன். ரிலாக்ஸ் தான் என் உற்சாகத்துக்குக் காரணம்."

“உங்க மரணம் எப்படி இருக்கணும்?”

“ம். திரும்பி வராத மாதிரி இருக்கணும். யெஸ். இன்னொரு முறை இங்கே பிறந்து கஷ்டப்பட நான் விரும்பலை. உயிரைப் பத்திக் கவலைப்டற ஆள் நானில்லை. செத்தா சாவுறோம்னு கவலைப்படாம ஏத்துப்பேன். ஏன்னா சாவு விஷயத்துல ரெகமண்டேஷன் எடுபடாது பாருங்க. வாழ்க்கையில் கடைசி அனுபவமான அந்த விநாடியையும் ரசிச்சு அனுபவிக்கவே விரும்பறேன். மரணம்கிறது த்ரில்லிங்கான சுயசரிதையோட கடைசி அத்தியாயம். அது சுவாரஸ்யமான விஷயமும்கூட.”

- எஸ்.பி.அண்ணாமலை படங்கள்: கே.ராஜசேகரன்

(03.05.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)