6.6 பில்லியன் ஏக்கர் நிலம், கவிஞர், குடும்ப ஏடிஎம்- ராணி இரண்டாம் எலிசபெத் குறித்த சுவாரஸ்யங்கள்!

தன் 70 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் முழுப் பொறுப்புடன் தன் அதிகாரத்தைச் செயல்படுத்தினார். உலகின் பல அரசுகளோடு இணக்கமான உறவைப் பேணினார். ஆகவேதான் உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார்.

Published:Updated:
ராணி இரண்டாம் எலிசபெத்
ராணி இரண்டாம் எலிசபெத்
0Comments
Share

தி கிரேட் பிரிட்டனின் ராணியான இரண்டாம் எலிசபெத் தன் 96-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும், தலைவர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 1953-ம் ஆண்டு முடிசூடிய எலிசபெத், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ராணியாக இருந்துள்ளார். இரண்டாம் எலிசபெத் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்... 

ராணி இரண்டாம் எலிசபெத்
ராணி இரண்டாம் எலிசபெத்

* உலகின் மிகப்பெரிய நில உடைமையாளரான ராணி எலிசபெத்தின் பெயரில் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் உள்ளது. 

* இவர் உலகின் 16 நாடுகளுக்கு ராணியாக இருந்திருக்கிறார். 

* தி கிரேட் பிரிட்டன் அரசாட்சிக்குட்பட்ட கடற்கரையிலிருந்து 3 மைல்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டால்பின்கள் மற்றும் திமிங்கிலங்கள் ராணிக்குச் சொந்தமானவை.

* லண்டன் தேம்ஸ் நதியில் உள்ள அனைத்து அன்னப் பறவைகளும் ராணிக்குச் சொந்தமானவையே. 

* ஓட்டுநர் உரிமங்கள் ராணியின் பெயரில் வழங்கப்படுகின்றன என்பதால், ராணிக்கு வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

* ராணியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. 

* பிரிட்டனின் ராணியாக இருந்த இவருக்கு இரண்டு பிறந்தநாள்கள் உள்ளன. இவரின் அதிகாரபூர்வ பிறந்தநாள் ஜூன் மாதம் இரண்டாவது சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. அவரின் உண்மையான பிறந்தநாள் ஏப்ரல் 21-ம் தேதி.

* ராணி தன் குடும்பத்துக்காக மட்டும் தனிப்பட்ட ஏ.டி.எம் ஒன்று வைத்திருக்கிறார், அந்த ஏ.டி.எம் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் உள்ளது.

* ராணியாக மட்டுமே இருப்பது சில சமயங்களில் மிகவும் சலிப்பை ஏற்படுத்தியதால், கவிதைகள் எழுதி கவிஞராகவும் திகழ்ந்திருக்கிறார்.

* பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் ராணியின் ஒப்புதலுக்காக அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவர் கையெழுத்திட்ட பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.

* ராணி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், 1992 -ம் ஆண்டிலிருந்து இவர் தானாக முன்வந்து வருமான வரி செலுத்தி வந்தார்.

ராணி இரண்டாம் எலிசபெத் நினைவலைகள்
ராணி இரண்டாம் எலிசபெத் நினைவலைகள்

* இவர் ஆஸ்திரேலியாவின் ராணியும்கூட என்பதால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார்.

* ராணி இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

* நாட்டின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் ராணி என்பதால் அவரை ஒருபோதும் கைது செய்ய முடியாத அதிகாரத்தைப் பெற்றிருந்தார்.

* பிரிட்டன் அரசின் ஆயுதப் படைகளின் தளபதியாகவும் இருந்தார்.

* பிரதம அமைச்சர் மற்றும் மந்திரிகளை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் இவருக்கு அதிகாரம் உண்டு.

* மற்றொரு நாட்டின் மீது அதிகாரபூர்வமாக போரை அறிவிக்கும் அதிகாரமும் இவருக்குண்டு.

* ராணி இரண்டாம் எலிசபெத் தன் 70 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் முழுப் பொறுப்புடன் தன் அதிகாரத்தைச் செயல்படுத்தினார். உலகின் பல அரசுகளோடு இணக்கமான உறவைப் பேணினார். ஆகவேதான் உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார்.